Friday, December 22, 2017

பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு வரும் பீரியட்ஸ்

பெண் குழந்தைகளுக்கு பிறந்த 2 வாரங்களுக்குள் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம் வரலாம். பயப்பட தேவை இல்லை 

தாயின் வயிற்றில் இருக்கும் போது சில ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் )  தொப்புள் கொடி மூலமாக தாயின் உடலில் இருந்து குழந்தையின் உடலுக்கு செல்கிறது. இது சில நாட்களில் குழந்தையின் உடலில் இருந்து வெளியேற்றபடும்போது உதிரபோக்கு ஏற்படுகிறது. சில நாட்களில் இந்த உதிரபோக்கு தானாகவே சரியாகி விடும்.

Monday, September 5, 2016

மருத்துவரை பார்க்க செல்லும்போது

1.குழந்தைக்கு என்ன என்ன பிரச்சனைகள் என்பதை சுருக்கமாக சொல்ல தயார் படுத்தி கொள்ளுங்கள். 

ஏனெனில் மருத்துவர் கேட்கும் போது அந்த பதட்டத்தில் சில பிரச்சனைக           ளை மறந்து விட வாய்ப்பு உள்ளது. தேவை ஏற்பட்டால் ஒரு சிறிய காகிதத்தில் எழுதி வைத்துகொள்ளலாம். தேவை இல்லாத தகவல்களை 
 தவிர்க்கலாம் என்னுடைய நண்பர்  அவரிடம் வந்த குழந்தையின் பெற்றோர் கூறியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

''சார் எங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் நர்ஸ் ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு. அவங்க தனியா தான் இருக்காங்க. நேத்து குழந்தைக்கு ஜுரம் வந்தது. நாங்கள் அவங்களிடம் அவசரத்திற்கு காய்ச்சல் மருந்து வாங்கி கொடுத்தோம்''
இதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்க முடியும். கூறியிருந்தால் அவருக்கு பின்னால் காத்திருக்கும் குழந்தையை சீக்கிரம் மருத்துவர் பரிசோதிக்க முடியும்.  

2. குழந்தைக்கு எளிதில் கழற்ற கூடிய  வகையில் பருத்தி ஆடை அணிந்து வருவது நல்லது.


ஏனெனில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜூரம் இருக்கும் இறுக்கமான மற்றும் மொத்தமான ஆடைகள் அணிவதால் ஜுரம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் குழந்தையின் மேலாடையை  கழற்றி விட வேண்டும் 

3.குழந்தைக்கு தேவையான உணவு எடுத்து கொள்வது மிகவும் அவசியம். 


ஏனெனில் மருத்துவ மனையில் எவ்வளவு நேரம் ஆகும் என யாரும் கணிக்க முடியாது.

4.குழந்தைக்கு பிடித்தமான இரண்டு பொம்மைகள் மற்றும் பட புத்தகங்களை  எடுத்து கொள்வது நல்லது.


ஏனெனில் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைக்கு எளிதில் BOAR அடிக்கும். (பெற்றோருக்கு BOAR அடிக்குமானால் ஏதேனும் கதை புத்தகங்கள், வார இதழ்களையும் எடுத்து வரலாம் )

5.இரண்டு அல்லது மூன்று DIAPER வைத்து கொள்வது நல்லது 

6. இரண்டு towel எடுத்து கொள்வது நல்லது 

ஏனெனில்  குழந்தையின் மேலாடையை கழற்றிய பின் குழந்தையின் மேல்பகுதிக்கு ஒரு towel , கீழ்பகுதிக்கு ஒரு towel  வைத்து மருத்துவரின் அறைக்குள் கொண்டு செல்லவும் 

7.குழந்தையின் மருத்துவ குறிப்பேடு மிகவும் அவசியம்.குழந்தைக்கு தற்போது கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து மருந்துகள், தடுப்பு ஊசி அட்டை முதலியவற்றை தவறாமல் எடுத்து கொள்ளவும். 


8. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் தங்கள் கைபேசியை அமைதி நிலைக்கு  மாற்றி கொள்வது அவசியம்.மருத்துவரின் அறைக்கு அருகாமையில் நின்றுகொண்டு சத்தமாக கைபேசி பேசுவதை தவிர்க்கவும்.

9. தொலை பேசியில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பின் முன்பதிவு செய்து விட்டு செல்லவும். எதனை மணிக்கு வரவேண்டும் என்பதை கேட்டு கொள்ளவும்.

ஏனெனில் இது காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும். ஆனால் தவறாமல் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சென்றுவிடுங்கள். 


10.மருத்துவரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்து கொள்ளுங்கள். மறக்காமல் இருக்கும். 

11.குழந்தைக்கு அதிகமாக வாந்தி , வயிற்று போக்கு  இருந்தால் சிறுநீர் குறைவாக கழித்தால், வலிப்பு வந்தால், மூச்சு திணறல் இருந்தால்  சிஸ்டரிடம்  உடனடியாக தெரிய படுத்தவும். உங்கள்TOKEN வரும் வரையில் காத்திருக்க வேண்டாம் 


12. ஏதேனும் சுய வைத்தியம் செய்து இருந்தால் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லி விடவும். 

ஒருவேளை அது வியாதியை கண்டுபிடிக்க, மேலும் வைத்தியத்தை சீக்கிரம் ஆரம்பிக்க அது உதவியாக  இருக்கும்

13. குழந்தைக்கு ஏதேனும் மருந்து அலர்ஜி இருந்தால் மறக்காமல் சொல்லுங்கள் 


14. குழந்தையின் இடுப்பில் ஒரு துண்டு வைத்து கொள்ளுங்கள்

அது என்னமோ தெரியவில்லை, சிறய குழந்தைகளுக்கு எங்கள்  மேல் URINE போக அவ்வளவு பிடித்து இருக்கிறது.



15. மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிக்கும்போது பேச  வேண்டாம். அப்படி பேசினால் மருத்துவரால் சரியாக பரிசோதிக்க இயலாது














நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே! 

Wednesday, April 30, 2014

டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன் எடுக்கணுமா?



பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம் வரலாம். முதலுதவியாக தலையில் அடிபட்ட இடத்தில் ice  வைக்கலாம் இது வீக்கம் ஏற்படுவதையும் வலியையும் குறைக்கும். அழுத்தி தேய்க்க கூடாது
இந்த குழந்தைகளுக்கு தலைக்கு ஸ்கேன் தேவை இல்லை

கீழே விழுந்தவுடன் குழந்தை மயக்கமடைந்து சுய நினைவு இல்லாமல் போனால்

கீழே விழுந்த பின் தொடர்ந்து வாந்தி எடுத்தால்

வலிப்பு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு தேவை எனில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்வார்.

பெரும்பாலான பெற்றோர்களின் பயம் தலையில் அடிபட்டால் பிற்காலத்தில் ஏதேனும் தொந்தரவு வருமோ என்பதுதான். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாமல் பிற்காலத்தில் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பெற்றோரின் அடுத்த கேள்வி

ஸ்கேன் எடுத்துட்டா நிம்மதியா பயம் இல்லாம இருக்கலாம் இல்லையா?

C T ஸ்கேன் என்பது கதிர்வீச்சு (X - Ray ) கொண்டு உடலின் உறுப்புகளை படம் பிடித்து காட்டுகிறது.இந்த X - Ray வை  உடலில் செலுத்தி தான் ஸ்கேன் எடுக்க படுகிறது. இந்த கதிர்வீச்சினால் உடலில் பல தீமைகள் ஏற்படலாம்


அதிகபடியான கதிர் வீசினால் வாந்தி, தலைவலி மயக்கம் போன்றவை உடனடியாக ஏற்படலாம்

பிற்காலத்தில் இரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்புகள் அதிகம்.
கதிர்வீச்சினால் மரபணுக்கள் சேதமடையலாம். இதனால் அடுத்த சந்ததியினர் பிறவி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது

எங்களது பயத்தை போக்க வழியே இல்லையா டாக்டர்?

MRI  ஸ்கேன் என்பது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது. ஆனால் கட்டணம் சற்று அதிகம்.







Saturday, April 5, 2014

தலையில் பேன்



இது ஒரு ஒட்டுனியால் வருகிறது.அதன் பெயர் pediculus humanus capitis

இது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது



இது மனித உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது. ஒரு பேன் 5 முறை தினமும் இரத்தம் குடிக்குமாம். ஒவ்வொரு முறையும் 0.00005ml இரத்தத்தை குடிக்குமாம். (இது அந்நியன் ஸ்டைல் : 5 பைசா திருடினா தப்பா? 5 லட்சம் பேர் 5 தடவை  5 பைசா திருடினா தப்பா?) இதனால் இரத்த சோகை ஏற்படலாம்




இதனால் தலையில் அரிப்பு, சிவப்பாகுதல், பாக்டீரியா கிருமி தாக்கம் கழுத்தில் நெறி கட்டுவது போன்ற அறிகுறிகள் காணப்படும் சில நேரங்களில் பேன் முட்டைகள் முடியில் ஒட்டி கொள்ளும் இதனை NITS  என்பர்.
சில நேரங்களில் இந்த கிருமி கண் இமையில் ஒட்டிக்கொண்டு எளிதில் எடுக்க முடியாத வண்ணம் இமைகள் ஒட்டிக்கொள்ளும்.

என்ன செய்வது?

பெர்மெத்ரின் (PERMETHRIN ), LINDANE SHAMPOO, GAMMA BENZENE  HEXACHLORIDE  போன்றவை பயன்படுத்தலாம்
இந்த மருந்துகளை தலை முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் குடும்பத்தில்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதனை பயன்படுத்தவும்

ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவது அவசியம்

குழந்தையின் உடைகளை, பெட்சீட் போன்றவைகளை  கொதிநீரில் ஊறவைத்து உலரவைக்கவும்.

Wednesday, March 19, 2014

தலையில் பத்து பிடித்தல் (CRADLE CAP/ SEBORRHEIC DERMATITIS)



பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் கருப்பாக அழுக்கு  போல படிந்து இருக்கும்

என்ன செய்வது?

தலைக்கு பவுடர் அடிக்காதீர்கள்

தலைக்கு SELINIUM   SULFIDE  ஷாம்பு அல்லது  KETOKONAZOLE  ஷாம்பு     உபயோகிக்கலாம்

கடினமான பத்தை எடுக்க OLIVE  OILஅல்லது தேங்காய் எண்ணெய்  தடவி ஊறவைத்து பிறகு ஷாம்பு உபயோகிக்கலாம்


வாரத்திற்கு 2 - 3 தடவை தலைக்கு ஷாம்பு உபயோகிக்கலாம்

தலைக்கு STEROID CREAM உபயோகிப்பதை தவிர்க்கவும் 

Tuesday, March 18, 2014

சிறுநீர் போகும்போது அழும் குழந்தை



பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது  அழுது கொண்டு இருக்கும். இது இயல்பான ஒன்று, இதற்கு கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலோ, வாந்தி, பால் சரியாக குடிக்க வில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுகவும்.

வெயில் நாட்களில் சில குழந்தைகள்
 சிறுநீர் அளவு குறைவாக செல்லும்
போது அழுவார்கள். இதற்க்கு நிறைய தண்ணீர்,
 ஜுஸ், மோர் தர்பூசணி
போன்றவை கொடுத்தால் சரியாகி விடும்.




URINARY  INFECTION இருந்தால் குழந்தைகளுக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக, அடிக்கடி  வரும்.  சிறுநீர் போகும்போது குழந்தை அழுது  கொண்டே இருக்கும்.ஜுரம் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்


சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் கல் இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது குழந்தைகள் அழும்

குழந்தைகளின் பிறப்பு உறுப்பில் ஏதேனும் காயம் அல்லது RASH இருந்தாலும் குழந்தை அழுது கொண்டே சிறுநீர் கழிக்கும். 

Saturday, October 8, 2011

sleepy time !!!

தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கும், மூளை சுறுசுறுப்பு திறனுக்கும் மிகவும் அவசியமானது. நமது மூளையின் நினைவாற்றலை short term memory மற்றும் long term memory என பிரிக்கலாம்.  short term memory என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் நினைவில் இருக்கும். ஆனால் long term memory என்பது நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும், தூக்கம் நாம் கற்று கொண்ட ஒரு விஷயத்தை short term memory இலிருந்து  long term memory ஆக  மாற்றுவதற்கு  உதவி செய்கிறது 

குழந்தைகள் எவ்வளவு  நேரம் தூங்க வேண்டும்  என எனது பழைய பதிவில் கூறி இருக்கிறேன். தூக்கம் நன்றாக வரும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்தால் சிறிது நேரம் புரண்டு அழுதுவிட்டு தூங்கிவிடும்.  குழந்தைகள் தூக்கத்திற்கு அழும்போது குழந்தையை தூங்க வைக்க தோளில் படுக்க  வைத்து கொண்டு நடப்பது, தொட்டிலை ஆட்டுவது, பால்  கொடுப்பது போன்ற வழிமுறைகளை பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு  செய்வதால்  குழந்தை அந்த முறைக்கு பழகி விடுகிறது. குழந்தை தானாக தூங்க கற்று கொள்வதில்லை. பிறகு எப்போது தூக்கம் வந்தாலும் அதே போன்ற முறைகளை எதிர்பார்க்கும், தூங்கிய பிறகு படுக்கையில் படுக்க வைத்தால் இலேசான சத்தம் கேட்டாலும் எழுந்து கொள்ளும், பிறகு பெற்றோர்  அதே முறைகளை  கடைபிடிக்க வேண்டியிருக்கும். எனவே இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நான்கு வயது முதல் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள், புதிய விஷயங்களை கற்று கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே எளிதில் தூங்க மறுப்பார்கள். 

சில பெற்றோர்கள் குழந்தைகளை பகலில் தூங்குவதற்கு வற்புறுத்துவது உண்டு. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பகலில் தூக்கம் அவசியம் இல்லை, எனவேதான் ஐந்து வயதிற்கு பிறகு முழுநேர பள்ளி நடத்த படுகிறது.


குழந்தைகளை தூங்கவைக்க பயமுறுத்தும் கதைகள், தூங்கா விட்டால் பூச்சாண்டி வந்து பிடித்து கொண்டு போய்விடுவான் என்று கூறுவதை சில பெற்றோர்கள் கடைபிடிகிறார்கள், அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு பல்வேறு பயத்தை உண்டுபண்ணும். சில மனிதர்கள், நிழல் போன்றவற்றை பார்த்து பயப்படுவார்கள்.



தூங்க வைப்பதற்கு சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். இவ்வாறு  செய்வதால் குழந்தைகளுக்கு சிறுவயது தூக்கம் பற்றிய பயமுறுத்தும் நினைவுகளை உண்டாக்கும்.

பதின்பருவ குழந்தைகள் தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் அவர்களின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும், அதற்கு தேவையான ஹார்மோன்கள் தூங்கும் நேரத்தில்தான் அதிகமாக சுரக்கும். எனவே சரியான தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் இன்றைய போட்டி மிகுந்த உலகம் குழந்தைகள் அதிகமாக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற pressure  அவர்களை சரியாக தூங்க விடுவதில்லை. 
இன்றைய காலத்தில் mobile , internet  மூலம் தூக்கத்தை குறைத்து கொள்கிறார்கள். எனவே குழந்தையின் பெட்ரூமில் டிவி, கம்ப்யூட்டர் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

தூக்கும் நேரம் என்பது நேர விரயம் என பல பெற்றோர்கள் என்னிடம் கூறுவதை கேட்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொல்வது இதுதான் '' நமது மூளையின் சுறுசுறுப்பு தன்மையை புதுப்பிக்க தூக்கம் மிகவும் அவசியம். எனவே தூங்கும் நேரம் விரயம் அல்ல என்பதுதான்''

தினமும் ஒரே நேரத்தில் தூங்க வைப்பது நல்லது .   

தூங்க வைப்பதற்கு முன்; 

இனிமேல் உங்கள் குழந்தையின் தூக்கத்தை சந்தோசமாக மாற்றுங்கள் 
SWEET DREAMS

Thursday, October 6, 2011

குழந்தைகளுக்கு மொட்டை எப்போது அடிக்கலாம்?


பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையில் Anterior  fontonelle  எனப்படும் சிறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கபால எலும்பு இருக்காது, தோல் மற்றும் ஒரு தசை மட்டுமே மூளையை மூடிக்கொண்டு இருக்கும். இந்த  Anterior  fontonelle  முழுவதுமாக எலும்பாக மாறுவதற்கு குறைந்தது 12  மாதங்கள் ஆகும். 

குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் போது வலியினால் தலையை ஆட்டும், தவறுதலாக கத்தியினால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு  Anterior  fontonelle  மூடாமல் இருப்பதால் இந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் மூளையில் வெட்டுபட வாய்ப்பு உள்ளது. இதனால் மூளையில் இரத்தகசிவு, வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
எனவே குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் ஒரு வயதிற்கு பிறகு அடிக்கலாம்.

பின் குறிப்பு: என்னிடம் வந்த 12  நாள் குழந்தைக்கு மொட்டை அடித்திருந்ததை பார்த்த பிறகே இந்த பதிவு.

Friday, August 19, 2011

பேபி வாக்கர் பயன்படுத்தலாமா?


வாக்கர் பயன்பாடுதுவதால் குழந்தை சீக்கிரம் நடக்க ஆரம்பிக்கும் என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. மேலும் இது பாதுகாப்பானது அல்ல.குழந்தைகள் வாக்கரில் நடக்கும்போது வாக்கரில் உள்ள  சக்கரத்தினால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓட ஆரம்பிக்கும். எனவே எதிரில் ஏதேனும் தடை இருந்தால் உடனே நிறுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம்.

ஒவ்வொரு வருடமும் இதனை பயன்படுத்தும்  நிறைய குழந்தைகள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். பல மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.எனவே வாக்கர் பயன் படுத்துவதை 
தவிர்க்கவும்.
STATIONARY WALKERS எனப்படும் சக்கரம் இல்லாத வாக்கர் பயன்படுத்துவதில் தவறில்லை








Thursday, August 11, 2011

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது


ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது?

நான்கு ஆறு மாதம் முடியும் வரை தாய்பால் மட்டுமே உணவு, தண்ணீர் கூட தேவையில்லை.அதன் பிறகு தாய்பாலின் அளவு குழந்தையின் எடைக்கு போதுமான அளவு இருப்பதில்லை, எனவே இணை உணவு ஆரம்பிப்பது அவசியம். இந்த நேரத்தில் இணை உணவு ஆரம்பிக்காவிடில் குழந்தையின்  எடை சரியாக அதிகரிக்காது. அரிசி கஞ்சி, பருப்பு தண்ணீர், காய்கறி சூப் போன்றவற்றை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கலாம். முதலில் ஆரம்பிக்கும்போது காலை நேரத்தில் கொடுப்பது நல்லது. வாரத்திற்கு ஒரு புதிய உணவு வீதம் சேர்த்து கொள்ளலாம். முதல் உணவு எந்தவித சுவையும் இல்லாமல் bland ஆக இருப்பது நல்லது முதலில் குழந்தைகள் உணவை துப்பும், தொடர்ந்து தினமும் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அந்த உணவை உண்ண பழகி கொள்ளும். வலுக்கட்டாயமாக உணவை திணிக்க கூடாது. விளையாட்டு காண்பித்து கொண்டே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு  ஒருவயது ஆன பின்பு குழந்தை தானாக எடுத்து உண்ண ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தையை தானாக உண்ணும்படி  ஊக்குவிக்க வேண்டும்.

6 -8 மாதம்: அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, வாழைபழம், வேகவைத்து  மசித்த உருளை கிழங்கு, இட்லி, வேக வைத்து மசித்த காய் கறிகள், பருப்பு சாதம்,கீரை சாதம்,  பிஸ்கட்  

9 - 10 மாதம்: முட்டை - மஞ்சள் கரு அதன் பின் வெள்ளை கரு, உப்புமா, பாயாசம், ஊறவைத்த சப்பாத்தி, வேகவைத்து மசித்த நிலகடலை,கொண்டைகடலை, பட்டாணி.

11 - 12 மாதம்: non-veg  சூப், ஈரல், வேகவைத்து மசித்த  மாமிசம், மீன்
ஒருவயது குழந்தை வீட்டில் தயாரிக்கும் எல்லா உணவுகளையும் உண்ணலாம். கடினமான நன்கு மென்று சாப்பிடவேண்டிய உணவு பொருட்களை தவிர்க்கவும், உதாரணமாக நிலகடலை சுண்டல் பட்டாணி போன்றவை மூச்சு குழாயில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே இது போன்ற உணவுபொருட்களை நன்றாக  மசித்து கொடுப்பது நல்லது. இரண்டு வயதுக்கு பிறகு குழந்தை நன்றாக மென்று தின்ன  பழகும்  வரை   மசித்து கொடுப்பதே  நல்லது

Saturday, July 2, 2011

குழந்தைகளுக்கு பசும்பால் எப்போது கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு 1 வயதிற்கு பிறகுதான் பசும்பால் கொடுக்கவேண்டும்.
ஏனெனில் பசும்பாலில் புரதம், கொழுப்பு மற்றும் உப்புசத்து அதிக அளவில் இருக்கிறது.ஒரு வயதிற்கு குறைவான குழந்தையின் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருப்பதில்லை, எனவே பசும்பாலில் உள்ள சத்துகளை செரித்து உறிஞ்சி கொள்ளுவது கடினம். மேலும் பசும்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக இருக்கிறது, இதனால் அதிகமாக பசும்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு இரத்த சோகை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக பசும்பால் குடிக்கும் குழந்தைகள் திட உணவுகள் சரியாக உண்ணுவதில்லை. அமெரிக்க குழந்தைகள் மருத்துவ கழகம் ஒரு வயதிற்கு பிறகே பசும்பால் கொடுக்கலாம் என பரிந்துரைக்கிறது.

Sunday, May 29, 2011

குழந்தைகளுக்கு AC பயன்படுத்தலாமா?


பொதுவாக AC என்றாலே குளிர்ச்சி, சளி பிடித்து விடும் எனவே AC பயன்படுத்தகூடாது என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது.
ஆனால் AC பயன்படுத்துவதால் வெளிக்காற்றில் உள்ள தூசு மற்றும் நோய் உருவாக்கும் சில நுண்கிருமிகள் அறைக்குள் வராமல் தடுக்க படுகிறது.

வெயில் காலத்தில் அறையின் வெப்பத்தை ஒரே சீராக வைத்து இருப்பதால் உடலுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் அறையில் AC யை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் வைப்பது நல்லது 

பச்சிளம் குழந்தையின் உடல் வெப்பம் குறைந்தால் குழந்தையின் கை மற்றும் கால் பாதம் முதலில் நீல நிறமாக மாறும், அவ்வாறு இருந்தால் குழந்தையை முதலில் அந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரவும். குழந்தையை வெதுவெதுப்பான இடத்தில்   வைக்க வேண்டும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் AC பயன்படுத்தினால் மூக்கடைப்பு எளிதில் ஏற்படும், இதுபோன்ற சமயங்களில் nasal drops போட்டு கொள்ளலாம். இது பலனில்லாமல் போனால் AC பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 

அலர்ஜி, ஆஸ்த்மா இருந்தாலும் AC பயன்படுத்தலாம். ஆனால் அறையின் வெப்பம் 28 முதல் 30 டிகிரி அளவில் வைத்து கொள்வது நல்லது. AC யை வருடத்திற்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்யவேண்டும். பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


Sunday, May 1, 2011

வளர்ச்சி வலி(GROWING PAIN)


இது 3  வயது முதல் 5 வயது மற்றும் 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வரும்.
கணுக்கால், கெண்டைகால் தொடை போன்ற இடங்களில் அதிகமாக வலி இருக்கும்.
காலில் வீக்கமோ, கால் சிவந்தோ இருக்காது.
வலி சில நிமிடம் முதல் சில மணி நேரம் வரை இருக்கும் 
பொதுவாக வலி தினமும் இருக்காது,
மாலை நேரம் அல்லது இரவில் வலி ஏற்படும் 
காலையில் வலி சரியாகி விடும் 
குழந்தைகளுக்கு வலி இருந்தாலும் நொண்டி கொண்டு நடக்க மாட்டார்கள்  
மசாஜ் செய்தால் வலி குறையும்
இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது 
தினமும் குழந்தை அழுவதால் பெற்றோர்களுக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால் இந்த வலியை சில எளிதான முறைகளால் சரி செய்து விடலாம் 

வலியை  குறைக்க என்ன செய்யலாம்?

வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்
மசாஜ் செய்யலாம் 
வலி நிவாரண ஜெல் தடவலாம் 
அதிக வலி இருந்தால் வலி நிவாரண மருந்துகள்(பாராசிடமால்) உட்கொள்ளலாம் 

கால் மூட்டுகளில்வலியோ  வீக்கமோ, சிவந்து இருந்தாலோ 
காலையில் வலி இருந்தாலோ 
ஜுரம் இருந்தால் 
குழந்தை நொண்டிக்கொண்டு நடந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.


Wednesday, April 27, 2011

KEROSENE POISONING


தினசரி வாழ்கையில் அதிகமாக நடக்கும் ஒன்று.குழந்தை மண்ணெண்ணெய் குடிப்பது.

ஏன் இது அதிகமாக நடக்கிறது?

1 அநேகமாக மண்ணெண்ணெய் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டிலில் நிரப்பி வைக்கபடுகின்றன.தாகம் எடுக்கும்போது தண்ணீர் என நினைத்து குடித்துவிடுகின்றன.

2  மண்ணெண்ணெயின் நீல நிறம் குழந்தைகளை குளிர்பானம் என நினைத்து குடிக்க தூண்டுகிறது. 

குழந்தையின் வாயில் மண்ணெண்ணெய் விழுந்தவுடன் அதனது வித்தியாசமான நெடியினால் குழந்தைகள் அதை விழுங்குவதை தவிர்க்க முயற்சி செய்யும்போது புரை ஏற வாய்ப்பு அதிகம். இவ்வாறு புரை ஏறுவதால் நுரையீரலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.

பாதிப்புகள்

நுரையீரல் சேதம் அடைதல் - மூச்சு திணறல் ஏற்படும். சில நேரங்களில் உயிர்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.

சில நேரங்களில் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது.

முதலுதவி 

வழக்கமாக எந்தவிதமான விஷமாக இருந்தாலும் உடனே வாந்தி எடுக்க வைப்பது நல்லது. ஆனால் மண்ணெண்ணெய் குடித்திருந்தால் வாந்தி எடுக்க வைக்க கூடாது.இவ்வாறு செய்தால் வாந்தி எடுக்கும்போது அதிகமாக புரை ஏற வாய்ப்பு உள்ளது, எனவே நுரையீரல் பாதிப்பு வாந்தி எடுக்க வைப்பதால் அதிகமாகும்.

குழந்தையின் உடையை உடனே கழற்றி விடவும். குழந்தையின் உடலை சோப்புநீர் கொண்டு கழுவவும்.

குழந்தையை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

வருமுன் காப்போம்

பெட்ரோலிய திரவங்கள் உதாரணமாக மண்ணெண்ணெய், பெட்ரோல், paint thinner furniture polish  போன்றவற்றை கண்டிப்பாக தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டிலில் வைக்காதீர்கள்.

இவற்றை குழந்தைகள் கையில் கிடைக்காதவாறு உயரத்தில் பூட்டி வைக்கவும்.



Saturday, April 23, 2011

புட்டிபால் - விஷம்



புட்டிபால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காதில் சீழ் வருதல், வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற வியாதிகள் வரலாம்.

புட்டிபால் குடிக்கும் குழந்தை தாயிடம் பாலை சரிவர குடிக்காது, இதனை nipple confusion என்று ஆங்கிலத்தில் கூறுவோம்.

இரண்டு வயது வரை மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான முக்கிய மூல  பொருட்கள் தாய்பாலில் மட்டுமே இருக்கிறது.எனவே கட்டாயம் இரண்டு வயது வரை மட்டுமாவது தாய்பால் கொடுக்க வேண்டும். அதிக  நாள் தாய்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலி குழந்தைகளாக வளருகின்றனர்.

தாய்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைய இருப்பதால் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்வருவதில்லை. 

குழந்தைகள் தூங்கும்போது பால் பாட்டில் வைத்து கொண்டே தூங்குவதால் பல் சொத்தையாக வாய்ப்பு இருக்கிறது.

பாலை அதிகமாக தண்ணீருடன் சேர்த்து கொடுப்பதால் குழந்தை நோஞ்சான் குழந்தையாக வளரும்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாச பிணைப்பு (BONDING ) தாய்பால் புகட்டுவதன் மூலம் ஏற்படும், இது புட்டிபால் கொடுப்பதால் தடைபடும்.

பசும்பால் சில குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.இதனால் வயிற்றுபோக்கு, அடிக்கடி சளி இருமல், தோல் அலர்ஜி, போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனை cows milk protein intolerance என்று கூறுவோம்.

எனவே புட்டிபால் கொடுப்பதை தவிர்க்கவும்.


Friday, April 22, 2011

குழந்தைகளின் தொண்டையில் ஏதேனும் சிக்கி கொண்டால் என்ன செய்வது?


குழந்தைகள் விளையாடும்போது அல்லது சாப்பிடும்போது திடீரென ஏதேனும் தொண்டையில் சிக்கி கொண்டால் தொடர்ச்சியான இருமலுடன் மூச்சு திணறல் ஏற்படும்.குழந்தை தொண்டையை பிடித்து கொண்டு இருமவோ அல்லது அழுகவோ செய்யும்.























இவ்வாறு நிகழ்ந்தால் உடனே சிறிய குழந்தையாக இருந்தால் குழந்தையை தலைகீழாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல செய்யவும்.



பெரிய குழந்தையாக இருந்தால், சுய நினைவுடன் இருக்கும்பட்சத்தில் கீழே உள்ளது போல செய்யலாம்.




பெரிய குழந்தை, சுயநினைவு இல்லாமல் இருந்தால் கீழே உள்ளதுபோல செய்வதன் மூலம் குழந்தையை காப்பாற்ற முடியும்.



குழந்தை மூச்சு விட வில்லை என்றால் குழந்தையின் வாயில் உங்கள் வாய் வைத்து மூச்சு கொடுக்கலாம்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மூச்சு கொடுத்துகொண்டே அழைத்து செல்லவும்.
வாயில் கையை விட்டு பொருளை எடுக்க முயற்சி செய்தல் கூடாது.


அதிகமாக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள்.
சில உணவுபொருட்கள் 
பட்டாணி, கடலை,
பாப் கார்ன்
முழு திராட்சை, ஆப்பிள் துண்டு 
சூயிங் கம் 
சாக்லேட்ஸ் 
சில விளையாட்டு பொருட்கள் 
நாணயங்கள் 
பலூன் 
பட்டன் பேட்டரி 
சிறிய குண்டுகள், உலோகத்தால் ஆன தோடு போன்ற ஆபரணங்கள்
பேனா மூடி 

சிறிய குழந்தைகள் உங்கள் கண்காணிப்பில் சாப்பிடட்டும்.
சாப்பிடும்போது ஓடி ஆடி விளையாடுவதை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு நன்றாக மென்று சாப்பிட கற்றுகொடுங்கள் 
முடிந்தவரை சிறிய குழந்தைகளுக்கு நன்றாக பொடி செய்த உணவுகளை கொடுக்கவும். பெரிய துண்டுகள் எளிதில் தொண்டையில் சிக்கி கொள்ளும்.
விளையாட்டு பொம்மைகளில் மிகவும் கவனம் தேவை (குழந்தைகளுக்கு பொம்மைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை வேறு பதிவில் கூறுகிறேன்)
குழந்தைகளின் கையில் நாணயங்களை கொடுக்காதீர்கள். 


Wednesday, April 20, 2011

SOFT DRINKS;BAD FOR HEALTH

இனிப்பான குளிர் பானங்கள் அதிக அளவில் சர்க்கரை கொண்டுள்ளது. இது  உடலுக்கு அதிக அளவு கலோரிகளை கொடுக்கிறது, ஆனால் இதில் விட்டமின் மற்றும் தாது உப்புகள் அதிகம் இருப்பதில்லை.மேலும் இதனை பதபடுத்த சில preservatives பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் சில உடல் நலத்திற்கு தீங்கானது.இதனை அதிக அளவில் உட்கொள்வதால் குழந்தைகள் குண்டு குழந்தைகள் ஆக வாய்ப்பு உள்ளது.
இந்த குளிர் பானங்களை குடிப்பதனால் குழந்தைகளுக்கு பசி குறைந்து விடுவதால் சத்துள்ள உணவுகள் மற்றும் பால்போன்ற உணவுகளை குழந்தைகள் சாபிடுவது குறைந்து விடும். இதனால் கால்சியம் மற்றும் பல வைட்டமின் சத்து குறைபாடுகள் வர வாய்ப்பு உள்ளது.



caffine கலந்த cola drinks அதிகம் குடிப்பதால் வயிற்றில் புண்(Gastritis) ஏற்படலாம்.

இனிப்பான குளிர்பானங்கள் குடிப்பதால் பல் தேய்மானம்(enamal erosion) மற்றும் சொத்தைபல் (dental caries ) வர வாய்ப்பு இருக்கிறது.

ஆயத்த குளிர்பானங்களுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த எலுமிச்சைசாறு, மோர், இளநீர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பழ சாறுக்கு பதிலாக பழங்கள் சாப்பிடுவது சிறந்தது. பழங்களை அப்படியே சாப்பிடுவதால் பழத்தில் உள்ள நார்சத்து உடல் நலத்திற்கு மிகவும் அவசியம்.









Thursday, April 7, 2011

KITCHEN SAFETY

நம் வீட்டின் மிகவும் ஆபத்தான பகுதி சமையல் அறை தான்.அங்கு குழந்தைகள் தங்களை காயபடுத்தி கொள்ள சில நொடிகளே போதும்.

1. உபயோகத்தில் இல்லாத போது சமையலறையின் கதவை தாளிட்டு விடவும்.அல்லது ஒரு halfdoor(baby gate )அமைத்து விடவும் .

2.தீப்பெட்டி மற்றும் lighter  ஆகியவற்றை உயரமான இடத்தில் வைக்கவும் 

3.அடுப்பினை அணைத்தவுடன் cylinder ரில் உள்ள knob இணையும் கையோடு ஆப் செய்து விடவும் .முடிந்த வரை ஆட்டோமாடிக் burner உள்ள stove வினை வாங்காமல் இருக்கலாம் .


4. கொதித்த தண்ணீர் ,பால் ,குழம்பு ஆகியவற்றை placemat டின் மீது வைக்க வேண்டாம் .குழந்தைகள் அவற்றை இழுத்து விட கூடும் .

5.induction stove ,தோசை  கல்   ஆகியவற்றை சூடு ஆறும் முன் கீழே எடுத்து வைக்க வேண்டாம். குழந்தைகள் தொட்டு விட கூடும் .

6.mixer, grinder, toaster, oven போன்றவற்றை plug இல் இருந்து கழட்டி வைக்கவும். 
  
7.pril , vim போன்ற detergent liquids யின் கலர் குழந்தைகள் அவற்றை cool drink என்று நினைத்து குடித்து விடலாம் .அவற்றின் நிறம் தெரியாத மாதிரி ஒரு kitchen towel லினை சுற்றி வைக்கலாம் .  




8.knives மற்றும்  பிற sharps போன்றவற்றை   பெரியர்வர்கள் மட்டும் அறியும் இடத்தில வைக்கலாம் .

9. fridge யினை lock and key ஆக  வைத்து  இருக்கலாம் . வினிகர் ,தண்ணீரை போலவே இருப்பதால் அதனை கவனமாக store செய்யவும். 

Thursday, March 24, 2011

SAFE SHOPPING WITH CHILDREN

குழந்தைகளை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்லும் போது இரண்டு பெரியவர்களாக சென்றால் ஒருவர் குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் .அல்லது  ஒருவர் வீட்டில் குழந்தைகளுடன் இருக்கலாம்
.

TIMING :கூட்டம் நிறைந்த நேரங்களை தவிர்த்து ,பிற்பகல் நேரங்களில்


ஷாப்பிங் செய்யலாம்.

1 TO 3 YEARS:1.குழந்தைக்கு ஷாப்பிங் செல்லும் முன் பசிஆற்றவும்2. DIAPER
எடுத்து கொள்ளவும் . 3 குழந்தைக்கு விருப்பமான பொம்மையை எடுத்து
கொள்ளவும் 4 .கொதித்து ஆற வைத்த தண்ணீர் மற்றும் பிஸ்கட்.

3 YEARS AND ABOVE:1.பசியில்லாமல் அல்லது சோர்வாக இல்லாத போது
அழைத்து செல்லலாம்.2.வீட்டில் இருந்து கிளம்பும் முன் TOILET உபயோகிக்க செய்யலாம் 3.COLOURING BOOKS அல்லது STORY புக்ஸ் எடுத்து
 செல்லலாம்.

SHOPPING CART:
SAFE MODEL

.1 கண்டிப்பாக ஒரு குழந்தைக்கு மேல் ஒரு கார்ட்டில் ஏற்ற வேண்டாம் 
  2.குழந்தையை கார்டில் உள்ள சீட்டில் உக்கார வைக்கவும், BASKET டில் அல்ல 
.
.3.குழந்தை கார்ட் டில் ஏறி நிற்காமல் பார்த்து கொள்ளவும்,ஏன் என்றால்

UNSAFE
அதனால் கார்ட் கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம் . 

  BREAKABLES :உடையும் பொருள்கள் உள்ள பகுதிக்கு செல்லும் போது, அதிக 
கவனம் தேவை. எதாவது பொருளை குழந்தை கேட்டால் "LETS LOOK AT IT 
TOGETHER " என்று கூறி நீங்கள் அவற்றை கையாளலாம் 
.
MEETING SPOT:ஏதாவது காரணத்தினால் பிரிய நேரிட்டால் ஒரு மீட்டிங் SPOT 
வைத்து கொள்ளலாம் .குழந்தைகளுக்கு UNIFORMED PERSONNEL இடம் உதவி  
கேட்க கற்று தரவும் .KIDS ZONE  நில் கூட குழந்தையை தனியாக விட வேண்டாம் ..