Thursday, March 24, 2011

SAFE SHOPPING WITH CHILDREN

குழந்தைகளை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்லும் போது இரண்டு பெரியவர்களாக சென்றால் ஒருவர் குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் .அல்லது  ஒருவர் வீட்டில் குழந்தைகளுடன் இருக்கலாம்
.

TIMING :கூட்டம் நிறைந்த நேரங்களை தவிர்த்து ,பிற்பகல் நேரங்களில்


ஷாப்பிங் செய்யலாம்.

1 TO 3 YEARS:1.குழந்தைக்கு ஷாப்பிங் செல்லும் முன் பசிஆற்றவும்2. DIAPER
எடுத்து கொள்ளவும் . 3 குழந்தைக்கு விருப்பமான பொம்மையை எடுத்து
கொள்ளவும் 4 .கொதித்து ஆற வைத்த தண்ணீர் மற்றும் பிஸ்கட்.

3 YEARS AND ABOVE:1.பசியில்லாமல் அல்லது சோர்வாக இல்லாத போது
அழைத்து செல்லலாம்.2.வீட்டில் இருந்து கிளம்பும் முன் TOILET உபயோகிக்க செய்யலாம் 3.COLOURING BOOKS அல்லது STORY புக்ஸ் எடுத்து
 செல்லலாம்.

SHOPPING CART:
SAFE MODEL

.1 கண்டிப்பாக ஒரு குழந்தைக்கு மேல் ஒரு கார்ட்டில் ஏற்ற வேண்டாம் 
  2.குழந்தையை கார்டில் உள்ள சீட்டில் உக்கார வைக்கவும், BASKET டில் அல்ல 
.
.3.குழந்தை கார்ட் டில் ஏறி நிற்காமல் பார்த்து கொள்ளவும்,ஏன் என்றால்

UNSAFE
அதனால் கார்ட் கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம் . 

  BREAKABLES :உடையும் பொருள்கள் உள்ள பகுதிக்கு செல்லும் போது, அதிக 
கவனம் தேவை. எதாவது பொருளை குழந்தை கேட்டால் "LETS LOOK AT IT 
TOGETHER " என்று கூறி நீங்கள் அவற்றை கையாளலாம் 
.
MEETING SPOT:ஏதாவது காரணத்தினால் பிரிய நேரிட்டால் ஒரு மீட்டிங் SPOT 
வைத்து கொள்ளலாம் .குழந்தைகளுக்கு UNIFORMED PERSONNEL இடம் உதவி  
கேட்க கற்று தரவும் .KIDS ZONE  நில் கூட குழந்தையை தனியாக விட வேண்டாம் .. 

Thursday, March 17, 2011

ITS BATH TIME!!!

குளியலறையின் வெளி மற்றும் உள் தாழ்ப்பாள் உயரத்தில் இருக்குமாறு வைக்கவும். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் தனியாக குளியலறைக்குள்ளே செல்லவோ உள்ளே சென்று தாள் போட்டு கொள்ளவோ முடியாது




குழந்தைகள் நீரில் மூழ்குவதற்கு சிறிய அளவு தண்ணீரே போதுமானது,

DANGEROUS


 எனவே bath tub பயன்பாட்டில் இல்லாத போது  நீரை நிரப்பி வைக்காதீர்கள்.
குளிப்பாட்ட பயன்படுத்தும் சுடுநீர் எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை உங்கள் பின்னங்கையில் சோதித்து விட்டு குழந்தையின் மேல் ஊற்றவும்


குளிப்பாட்டும்போது தொலைபேசியோ வாசல் அழைப்பு மணியோ அடித்தால் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், தவிர்க்க முடியாத நிலையில் குழந்தையை துண்டில் சுற்றிக்கொண்டு உங்களுடன் எடுத்து செல்லுங்கள்.


குளியலறையில் வழுக்காத தரைபதிப்புகளை போடுவது நல்லது.
சோப்பு, ஷாம்பு, சவரம் செய்ய பயன்படுத்தும் பிளேடுகள், after shave lotion டூத் பேஸ்ட் முதலியவற்றை எட்டாத இடத்தில் பூட்டி வைக்கவும்
குளியலறை மற்றும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில் ஆசிட் போன்றவைகளை எட்டாத இடத்தில் பூட்டி வைக்கவும்.


    

இருமல் சளி இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள்


மிதமான வெந்நீர் குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும். இருமல் குறைவதுடன் சளியை வெளிக்கொண்டு வரவும் இது உதவும்.


திரவ உணவுகள் அதிகமாக உட்கொள்ளவது நல்லது

குளிர்ச்சியான நீர், இனிப்பான திரவ மற்றும் திட உணவுகளை(sweets, chocolates) தவிர்ப்பது நல்லது .





அடிக்கடி சிறிய அளவில் உணவு எடுத்து கொள்வது நல்லது. 

கீரை வகைகள், பாதி வேக வாய்த்த காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


ஆஸ்த்மா உள்ள குழந்தைகள் குளிர்ச்சியான திரவங்களை  (cool drinks , ice cream , ice water ) தவிர்ப்பது நல்லது.
 மருந்துகள் எடுத்தும் wheezing குறையாத பட்சத்தில் சில உணவு பொருட்களை (உதாரணமாக . நிலகடலை, ஆரஞ்சு, முட்டை, மீன்,சாக்லேட் போன்றவை) தவிர்க்கலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு இவற்றை தவிர்க்கவும். 


ரேபிஸ் - 100 % உயிர்கொல்லி நோய்

 இந்தியாவில் 20000 பேர் ஒவ்வொரு வருடமும் ரேபிஸ் நோயினால் இறக்கிறார்கள். ரேபிஸ் நோய் தாக்கினால் தடுப்பு ஊசி போடவில்லை எனில் நிச்சயமாக மரணமே!!. ஆனால் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் வராமல் நாம் தடுக்க முடியும். 

ரேபிஸ் எப்படி வருகிறது?
ரேபிஸ் நோய் உள்ள (rabid animals ) நாய், பூனை,மாடு, ஆடு,பன்றி, கழுதை,குதிரை, ஒட்டகம்,நரி,குரங்கு,கரடி மற்றும் பல மிருகங்கள் கடிப்பது, பிராண்டுவது(scratch ), மனித உடலில் காயம் பட்ட இடத்தை மிருகங்கள் நாக்கினால் நக்குவது மூலமாக பரவுகிறது. இவற்றில் முக்கியமான பிராணி நாய்.



ரேபிஸ் தடுப்பு ஊசி எப்போது போட வேண்டும்?
animal bite is a medical emergency . கடித்த உடன்  தடுப்பு ஊசி போட வேண்டும். தாமத படுத்தினால்தடுப்பு ஊசி போட்டாலும் நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. 
கடி பட்டால் கருத்தரித்த பெண்கள், தாய்பாலூட்டும் பெண்களுக்கும் கட்டாயம் ஊசி போடலாம்.
நாய் மட்டுமல்ல மேற்கூறிய எல்லா விலங்குகளின் கடிகளுக்கும் தடுப்பு ஊசி போட வேண்டும்.



முதலுதவி 
கடி பட்ட இடத்தை சோப்பு கொண்டு குழாய் நீரில்(running tap water ) கழுவ வேண்டும். 
povidone iodine தடவலாம்


வருமுன் காப்போம் 
அதிகமாக மேற்கூறிய பிராணிகளுடன் பழக நேர்ந்தால் அவர்கள் முன்கூட்டியே தடுப்பு ஊசி போட்டு கொள்ளலாம் 

ஏற்கனவே தடுப்பு ஊசி போட பட்டு இருந்தால் கடி ஏற்பட்ட பின்பு இரண்டு ஊசிகள் போடவேண்டும்.


தடுப்பு ஊசி எப்போது தேவை இல்லை?
செல்ல பிராணிகளை தொடுவது, நமது காயம் படாத இடத்தை பிராணிகள் நக்குவது போன்ற நேரங்களில் தடுப்பு ஊசிகள் தேவை இல்லை.  


Monday, March 7, 2011

வேர்க்குரு என்ன செய்வது?


வேர்க்குரு எல்லாருக்கும் வரலாம், குழந்தைகள்  அதிகம் பாதிக்க படுகிறார்கள் 
உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் வெயில் நாட்களில் அதிக வியர்வையை சுரக்கிறது. இந்த வியர்வை நீண்ட நேரம் உடலில் இருந்தால் வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் அடைப்பு ஏற்படும்.இந்த வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் அடைப்பு ஏற்படுவதால் வேர்க்குரு வருகிறது. இது  
நீர் நிரம்பிய சிறிய கொப்புளம் போன்று இருக்கும்
அரிப்பு ஏற்படும்.
இதனால் குழந்தையின் உடல்நலம் எந்தவகையிலும் பாதிக்க படாது. அரிப்பு மற்றும் எரிச்சலினால் குழந்தைகள் சிறிது சிரமப்படுவார்கள். பொதுவாக ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகி விடும்.





எப்படி தடுக்கலாம்? 

அதிகமாக வியர்வை இல்லாமல் பார்த்து கொள்வது

வியர்வையை உடனுக்குடன் துடைத்து விட வேண்டும்
  
அறையின் வெப்பத்தை குறைவாக வைத்து கொள்வது

AC அல்லது aircooler   பயன்படுத்தலாம்
 
குளிர்ந்த நீர் கொண்டு அடிக்கடி குளிப்பாட்டலாம்
அதிகமாக வியர்வை வரும் இடங்களில் மட்டும் பவுடர் தடவலாம்
வெயிலில் விளையாடுவதை தவிர்க்கலாம்

மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்

இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

வேர்க்குரு வந்த பின்!!!
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வேர்க்குரு  இருக்கும் பகுதியை காற்றோட்டமாக வைப்பதால் அரிப்பு குறைவாக இருக்கும்

 வேர்க்குரு இருக்கும் இடத்தில் சந்தனம் தடவலாம்



Sunday, March 6, 2011

Baby Massage Techniques



இந்த வீடியோவில் உள்ள முறையை பின்பற்றலாம். தனிப்பட்ட க்ரீம் தேவையில்லை.தேங்காய்  எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போதுமானது.

பச்சிளம் குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா?


முதல்  மாதத்தில்  ஆயில்  மசாஜ்  செய்வதை  தவிர்க்கவும்.  எடை  குறைவாக  பிறந்த  குழந்தை  எனில்  குழந்தை  3 கிலோ  எடை  வரும்வரை 
காத்திருக்கவும்
மசாஜை சரியான முறையில் செய்தால் எல்லா குழந்தைகளும் மசாஜை சுகமாக உணரும்.


காது, கண்  மற்றும் மூக்கில் எண்ணெய் விடகூடாது.அதிகமாக  எண்ணெய் ஒழுகும்படி தலையில் எண்ணெய் தேய்த்து விட கூடாது

தேங்காய்  அல்லது ஆலிவ் ஆயில்  கொண்டு  மசாஜ்  செய்யலாம்.மசாஜ் செய்யும்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே செய்வது நல்லது. முடிந்தால் காலை வெயிலில் சிறிது நேரம் குழந்தையை காட்டலாம். வைட்டமின் D சத்து குழந்தைக்கு கிடைக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு குளிப்பாட்டவும்.
இவ்வாறு செய்வதால் குழந்தையின்  உடலில்  இரத்த  ஓட்டம்  நன்றாக   இருக்கும் , நன்றாக  தூங்கும்,அழுவது  குறைவாக  இருக்கும் குழந்தையின் எடைகூடுவது நோய் எதிர்ப்பு சக்தி கூடுவது போன்ற நன்மைகள் ஏற்படும்.