Sunday, May 29, 2011

குழந்தைகளுக்கு AC பயன்படுத்தலாமா?


பொதுவாக AC என்றாலே குளிர்ச்சி, சளி பிடித்து விடும் எனவே AC பயன்படுத்தகூடாது என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது.
ஆனால் AC பயன்படுத்துவதால் வெளிக்காற்றில் உள்ள தூசு மற்றும் நோய் உருவாக்கும் சில நுண்கிருமிகள் அறைக்குள் வராமல் தடுக்க படுகிறது.

வெயில் காலத்தில் அறையின் வெப்பத்தை ஒரே சீராக வைத்து இருப்பதால் உடலுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் அறையில் AC யை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் வைப்பது நல்லது 

பச்சிளம் குழந்தையின் உடல் வெப்பம் குறைந்தால் குழந்தையின் கை மற்றும் கால் பாதம் முதலில் நீல நிறமாக மாறும், அவ்வாறு இருந்தால் குழந்தையை முதலில் அந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரவும். குழந்தையை வெதுவெதுப்பான இடத்தில்   வைக்க வேண்டும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் AC பயன்படுத்தினால் மூக்கடைப்பு எளிதில் ஏற்படும், இதுபோன்ற சமயங்களில் nasal drops போட்டு கொள்ளலாம். இது பலனில்லாமல் போனால் AC பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 

அலர்ஜி, ஆஸ்த்மா இருந்தாலும் AC பயன்படுத்தலாம். ஆனால் அறையின் வெப்பம் 28 முதல் 30 டிகிரி அளவில் வைத்து கொள்வது நல்லது. AC யை வருடத்திற்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்யவேண்டும். பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


Sunday, May 1, 2011

வளர்ச்சி வலி(GROWING PAIN)


இது 3  வயது முதல் 5 வயது மற்றும் 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வரும்.
கணுக்கால், கெண்டைகால் தொடை போன்ற இடங்களில் அதிகமாக வலி இருக்கும்.
காலில் வீக்கமோ, கால் சிவந்தோ இருக்காது.
வலி சில நிமிடம் முதல் சில மணி நேரம் வரை இருக்கும் 
பொதுவாக வலி தினமும் இருக்காது,
மாலை நேரம் அல்லது இரவில் வலி ஏற்படும் 
காலையில் வலி சரியாகி விடும் 
குழந்தைகளுக்கு வலி இருந்தாலும் நொண்டி கொண்டு நடக்க மாட்டார்கள்  
மசாஜ் செய்தால் வலி குறையும்
இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது 
தினமும் குழந்தை அழுவதால் பெற்றோர்களுக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால் இந்த வலியை சில எளிதான முறைகளால் சரி செய்து விடலாம் 

வலியை  குறைக்க என்ன செய்யலாம்?

வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்
மசாஜ் செய்யலாம் 
வலி நிவாரண ஜெல் தடவலாம் 
அதிக வலி இருந்தால் வலி நிவாரண மருந்துகள்(பாராசிடமால்) உட்கொள்ளலாம் 

கால் மூட்டுகளில்வலியோ  வீக்கமோ, சிவந்து இருந்தாலோ 
காலையில் வலி இருந்தாலோ 
ஜுரம் இருந்தால் 
குழந்தை நொண்டிக்கொண்டு நடந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.