Sunday, January 16, 2011

விரல் சப்புதல் தீமையா?


விரல் சப்புதல் ஒன்று  முதல் நான்கு  வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். இதனால் எந்த தீமையும் ஏற்படாது. எனவே கவலைப்பட தேவையில்லை. தானாகவே இது சரியாகிவிடும். இதை பெற்றோர் அதிகமாக கண்டித்தால் நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.










இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஐந்து வயதுக்கு மேல் தொடர்ந்தால் பல் முன்னோக்கி வளர்வது, முக அமைப்பில் மாற்றம், விரலில் காயம் மற்றும் சீழ் வைத்தல், குடலில் கிருமி  போன்றவை ஏற்படலாம்









எப்பொழுது கவலை பட வேண்டும்?
ஐந்து வயதுக்கு மேல் குழந்தை விரல் சப்பினால் அதனை சரி செய்ய முயற்சி செய்யலாம்
குழந்தை  விரல் சப்பாமல் இருக்கும் நாட்களில் சிறிய பரிசு கொடுப்பதன் மூலம்விரல் சப்பாமல் இருக்க ஊக்க படுத்தலாம்.
கையை சுத்தமாக வைப்பதன் மூலம் கிருமி பாதிப்பு வராமல் தடுக்கலாம்
சுத்தமான முறையில் சூப்பான் பயன்படுத்தலாம்.
குழந்தையின் கவனத்தை வேறு விளையாட்டுகளில் திருப்புவதன் மூலம் மறக்க வைக்கலாம்.
கைகளில் கையுறை அணிவிக்கலாம்.

Sunday, January 2, 2011

ஜுரவலிப்பு என்பது என்ன ?

ஜுரவலிப்பு(FEBRILE FITS)  என்பது என்ன ?
5  வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஜுரம் அதிகமானால் வலிப்பு வரக்கூடும். இதை ஜுரவலிப்பு என்று அழைக்கிறோம்.
இது ஏன் வருகிறது?
குழந்தைகளின் மூளை அதிக ஜுரத்தினால் எளிதில் தூண்டப்பட்டு வலிப்பு வருகிறது
இதை தடுக்க என்ன வழி?
ஜுரம் வந்தவுடன் ஜுர மருந்து (பாராசிடமால் ) உடனே கொடுத்து ஈரதுனியால் உடலை துடைத்து விட வேண்டும்.
இதற்கு முன்னால் ஜுரவலிப்பு வந்த குழந்தைகளுக்கு பிரிசியம் எனும் மாத்திரை கொடுக்கலாம்   
 பருத்தி ஆடை அணிவது நல்லது. ஸ்வெட்டர் அணிவதை தவிர்க்கவும்
வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது?
பதட்டப்பட வேண்டாம்.
குழந்தையை பக்கவாட்டில் படுக்க வைக்கவும்
குழந்தையின் கையில் இரும்பு போன்ற பொருட்களை தருவதால்  வலிப்பு நின்றுவிடும் என்பது தவறான கருத்து. கூறிய இரும்பினால் குழந்தைக்கு காயம் ஏற்படலாம்.
குழந்தை பற்களை இறுக்கமாக கடித்து கொண்டிருந்தால் அதை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டாம். நாக்கை கடித்து கொள்ளாமல் இருக்க பற்களுக்கு இடையே துணி வைக்கலாம்.
ஆசனவாய் வழியாக டயசிபாம் என்ற மருந்து வைபதன் மூலம் வலிப்பை நிறுத்தலாம்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குசென்றுவிடவும். முதலுதவி பெற்ற பின்பு நீங்கள் வழக்கமாக செல்லும் குழந்தை நல மருத்துவரிடம் செல்லலாம்.
வலிப்பு நின்று விட்ட பின்பு குழந்தை நன்றாக இருந்தாலும் மருத்துவரை பார்ப்பது நல்லது, ஏனெனில் சில சமயம் வலிப்பு மறுபடியும் வரலாம்.
சாதாரண ஜுரவலிபினால் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி  பாதிப்பு ஏற்படுவது இல்லை.
பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால் பள்ளி ஆசிரியரிடம் இதை பற்றி தெரிவிக்கவும். ஜுரம் வந்தால் உடனடியாக முதலுதவி செய்வது எப்படி என்று குழந்தையின் டைரியில் குறிப்பிடவும்.