Thursday, March 17, 2011

ரேபிஸ் - 100 % உயிர்கொல்லி நோய்

 இந்தியாவில் 20000 பேர் ஒவ்வொரு வருடமும் ரேபிஸ் நோயினால் இறக்கிறார்கள். ரேபிஸ் நோய் தாக்கினால் தடுப்பு ஊசி போடவில்லை எனில் நிச்சயமாக மரணமே!!. ஆனால் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் வராமல் நாம் தடுக்க முடியும். 

ரேபிஸ் எப்படி வருகிறது?
ரேபிஸ் நோய் உள்ள (rabid animals ) நாய், பூனை,மாடு, ஆடு,பன்றி, கழுதை,குதிரை, ஒட்டகம்,நரி,குரங்கு,கரடி மற்றும் பல மிருகங்கள் கடிப்பது, பிராண்டுவது(scratch ), மனித உடலில் காயம் பட்ட இடத்தை மிருகங்கள் நாக்கினால் நக்குவது மூலமாக பரவுகிறது. இவற்றில் முக்கியமான பிராணி நாய்.



ரேபிஸ் தடுப்பு ஊசி எப்போது போட வேண்டும்?
animal bite is a medical emergency . கடித்த உடன்  தடுப்பு ஊசி போட வேண்டும். தாமத படுத்தினால்தடுப்பு ஊசி போட்டாலும் நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. 
கடி பட்டால் கருத்தரித்த பெண்கள், தாய்பாலூட்டும் பெண்களுக்கும் கட்டாயம் ஊசி போடலாம்.
நாய் மட்டுமல்ல மேற்கூறிய எல்லா விலங்குகளின் கடிகளுக்கும் தடுப்பு ஊசி போட வேண்டும்.



முதலுதவி 
கடி பட்ட இடத்தை சோப்பு கொண்டு குழாய் நீரில்(running tap water ) கழுவ வேண்டும். 
povidone iodine தடவலாம்


வருமுன் காப்போம் 
அதிகமாக மேற்கூறிய பிராணிகளுடன் பழக நேர்ந்தால் அவர்கள் முன்கூட்டியே தடுப்பு ஊசி போட்டு கொள்ளலாம் 

ஏற்கனவே தடுப்பு ஊசி போட பட்டு இருந்தால் கடி ஏற்பட்ட பின்பு இரண்டு ஊசிகள் போடவேண்டும்.


தடுப்பு ஊசி எப்போது தேவை இல்லை?
செல்ல பிராணிகளை தொடுவது, நமது காயம் படாத இடத்தை பிராணிகள் நக்குவது போன்ற நேரங்களில் தடுப்பு ஊசிகள் தேவை இல்லை.  


No comments:

Post a Comment