Friday, December 22, 2017

பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு வரும் பீரியட்ஸ்

பெண் குழந்தைகளுக்கு பிறந்த 2 வாரங்களுக்குள் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம் வரலாம். பயப்பட தேவை இல்லை 

தாயின் வயிற்றில் இருக்கும் போது சில ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் )  தொப்புள் கொடி மூலமாக தாயின் உடலில் இருந்து குழந்தையின் உடலுக்கு செல்கிறது. இது சில நாட்களில் குழந்தையின் உடலில் இருந்து வெளியேற்றபடும்போது உதிரபோக்கு ஏற்படுகிறது. சில நாட்களில் இந்த உதிரபோக்கு தானாகவே சரியாகி விடும்.

Monday, September 5, 2016

மருத்துவரை பார்க்க செல்லும்போது

1.குழந்தைக்கு என்ன என்ன பிரச்சனைகள் என்பதை சுருக்கமாக சொல்ல தயார் படுத்தி கொள்ளுங்கள். 

ஏனெனில் மருத்துவர் கேட்கும் போது அந்த பதட்டத்தில் சில பிரச்சனைக           ளை மறந்து விட வாய்ப்பு உள்ளது. தேவை ஏற்பட்டால் ஒரு சிறிய காகிதத்தில் எழுதி வைத்துகொள்ளலாம். தேவை இல்லாத தகவல்களை 
 தவிர்க்கலாம் என்னுடைய நண்பர்  அவரிடம் வந்த குழந்தையின் பெற்றோர் கூறியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

''சார் எங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் நர்ஸ் ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு. அவங்க தனியா தான் இருக்காங்க. நேத்து குழந்தைக்கு ஜுரம் வந்தது. நாங்கள் அவங்களிடம் அவசரத்திற்கு காய்ச்சல் மருந்து வாங்கி கொடுத்தோம்''
இதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்க முடியும். கூறியிருந்தால் அவருக்கு பின்னால் காத்திருக்கும் குழந்தையை சீக்கிரம் மருத்துவர் பரிசோதிக்க முடியும்.  

2. குழந்தைக்கு எளிதில் கழற்ற கூடிய  வகையில் பருத்தி ஆடை அணிந்து வருவது நல்லது.


ஏனெனில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜூரம் இருக்கும் இறுக்கமான மற்றும் மொத்தமான ஆடைகள் அணிவதால் ஜுரம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் குழந்தையின் மேலாடையை  கழற்றி விட வேண்டும் 

3.குழந்தைக்கு தேவையான உணவு எடுத்து கொள்வது மிகவும் அவசியம். 


ஏனெனில் மருத்துவ மனையில் எவ்வளவு நேரம் ஆகும் என யாரும் கணிக்க முடியாது.

4.குழந்தைக்கு பிடித்தமான இரண்டு பொம்மைகள் மற்றும் பட புத்தகங்களை  எடுத்து கொள்வது நல்லது.


ஏனெனில் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைக்கு எளிதில் BOAR அடிக்கும். (பெற்றோருக்கு BOAR அடிக்குமானால் ஏதேனும் கதை புத்தகங்கள், வார இதழ்களையும் எடுத்து வரலாம் )

5.இரண்டு அல்லது மூன்று DIAPER வைத்து கொள்வது நல்லது 

6. இரண்டு towel எடுத்து கொள்வது நல்லது 

ஏனெனில்  குழந்தையின் மேலாடையை கழற்றிய பின் குழந்தையின் மேல்பகுதிக்கு ஒரு towel , கீழ்பகுதிக்கு ஒரு towel  வைத்து மருத்துவரின் அறைக்குள் கொண்டு செல்லவும் 

7.குழந்தையின் மருத்துவ குறிப்பேடு மிகவும் அவசியம்.குழந்தைக்கு தற்போது கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து மருந்துகள், தடுப்பு ஊசி அட்டை முதலியவற்றை தவறாமல் எடுத்து கொள்ளவும். 


8. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் தங்கள் கைபேசியை அமைதி நிலைக்கு  மாற்றி கொள்வது அவசியம்.மருத்துவரின் அறைக்கு அருகாமையில் நின்றுகொண்டு சத்தமாக கைபேசி பேசுவதை தவிர்க்கவும்.

9. தொலை பேசியில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பின் முன்பதிவு செய்து விட்டு செல்லவும். எதனை மணிக்கு வரவேண்டும் என்பதை கேட்டு கொள்ளவும்.

ஏனெனில் இது காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும். ஆனால் தவறாமல் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சென்றுவிடுங்கள். 


10.மருத்துவரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்து கொள்ளுங்கள். மறக்காமல் இருக்கும். 

11.குழந்தைக்கு அதிகமாக வாந்தி , வயிற்று போக்கு  இருந்தால் சிறுநீர் குறைவாக கழித்தால், வலிப்பு வந்தால், மூச்சு திணறல் இருந்தால்  சிஸ்டரிடம்  உடனடியாக தெரிய படுத்தவும். உங்கள்TOKEN வரும் வரையில் காத்திருக்க வேண்டாம் 


12. ஏதேனும் சுய வைத்தியம் செய்து இருந்தால் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லி விடவும். 

ஒருவேளை அது வியாதியை கண்டுபிடிக்க, மேலும் வைத்தியத்தை சீக்கிரம் ஆரம்பிக்க அது உதவியாக  இருக்கும்

13. குழந்தைக்கு ஏதேனும் மருந்து அலர்ஜி இருந்தால் மறக்காமல் சொல்லுங்கள் 


14. குழந்தையின் இடுப்பில் ஒரு துண்டு வைத்து கொள்ளுங்கள்

அது என்னமோ தெரியவில்லை, சிறய குழந்தைகளுக்கு எங்கள்  மேல் URINE போக அவ்வளவு பிடித்து இருக்கிறது.



15. மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிக்கும்போது பேச  வேண்டாம். அப்படி பேசினால் மருத்துவரால் சரியாக பரிசோதிக்க இயலாது














நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே! 

Wednesday, April 30, 2014

டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன் எடுக்கணுமா?



பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம் வரலாம். முதலுதவியாக தலையில் அடிபட்ட இடத்தில் ice  வைக்கலாம் இது வீக்கம் ஏற்படுவதையும் வலியையும் குறைக்கும். அழுத்தி தேய்க்க கூடாது
இந்த குழந்தைகளுக்கு தலைக்கு ஸ்கேன் தேவை இல்லை

கீழே விழுந்தவுடன் குழந்தை மயக்கமடைந்து சுய நினைவு இல்லாமல் போனால்

கீழே விழுந்த பின் தொடர்ந்து வாந்தி எடுத்தால்

வலிப்பு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு தேவை எனில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்வார்.

பெரும்பாலான பெற்றோர்களின் பயம் தலையில் அடிபட்டால் பிற்காலத்தில் ஏதேனும் தொந்தரவு வருமோ என்பதுதான். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாமல் பிற்காலத்தில் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பெற்றோரின் அடுத்த கேள்வி

ஸ்கேன் எடுத்துட்டா நிம்மதியா பயம் இல்லாம இருக்கலாம் இல்லையா?

C T ஸ்கேன் என்பது கதிர்வீச்சு (X - Ray ) கொண்டு உடலின் உறுப்புகளை படம் பிடித்து காட்டுகிறது.இந்த X - Ray வை  உடலில் செலுத்தி தான் ஸ்கேன் எடுக்க படுகிறது. இந்த கதிர்வீச்சினால் உடலில் பல தீமைகள் ஏற்படலாம்


அதிகபடியான கதிர் வீசினால் வாந்தி, தலைவலி மயக்கம் போன்றவை உடனடியாக ஏற்படலாம்

பிற்காலத்தில் இரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்புகள் அதிகம்.
கதிர்வீச்சினால் மரபணுக்கள் சேதமடையலாம். இதனால் அடுத்த சந்ததியினர் பிறவி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது

எங்களது பயத்தை போக்க வழியே இல்லையா டாக்டர்?

MRI  ஸ்கேன் என்பது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது. ஆனால் கட்டணம் சற்று அதிகம்.







Saturday, April 5, 2014

தலையில் பேன்



இது ஒரு ஒட்டுனியால் வருகிறது.அதன் பெயர் pediculus humanus capitis

இது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது



இது மனித உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது. ஒரு பேன் 5 முறை தினமும் இரத்தம் குடிக்குமாம். ஒவ்வொரு முறையும் 0.00005ml இரத்தத்தை குடிக்குமாம். (இது அந்நியன் ஸ்டைல் : 5 பைசா திருடினா தப்பா? 5 லட்சம் பேர் 5 தடவை  5 பைசா திருடினா தப்பா?) இதனால் இரத்த சோகை ஏற்படலாம்




இதனால் தலையில் அரிப்பு, சிவப்பாகுதல், பாக்டீரியா கிருமி தாக்கம் கழுத்தில் நெறி கட்டுவது போன்ற அறிகுறிகள் காணப்படும் சில நேரங்களில் பேன் முட்டைகள் முடியில் ஒட்டி கொள்ளும் இதனை NITS  என்பர்.
சில நேரங்களில் இந்த கிருமி கண் இமையில் ஒட்டிக்கொண்டு எளிதில் எடுக்க முடியாத வண்ணம் இமைகள் ஒட்டிக்கொள்ளும்.

என்ன செய்வது?

பெர்மெத்ரின் (PERMETHRIN ), LINDANE SHAMPOO, GAMMA BENZENE  HEXACHLORIDE  போன்றவை பயன்படுத்தலாம்
இந்த மருந்துகளை தலை முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் குடும்பத்தில்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதனை பயன்படுத்தவும்

ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவது அவசியம்

குழந்தையின் உடைகளை, பெட்சீட் போன்றவைகளை  கொதிநீரில் ஊறவைத்து உலரவைக்கவும்.

Wednesday, March 19, 2014

தலையில் பத்து பிடித்தல் (CRADLE CAP/ SEBORRHEIC DERMATITIS)



பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் கருப்பாக அழுக்கு  போல படிந்து இருக்கும்

என்ன செய்வது?

தலைக்கு பவுடர் அடிக்காதீர்கள்

தலைக்கு SELINIUM   SULFIDE  ஷாம்பு அல்லது  KETOKONAZOLE  ஷாம்பு     உபயோகிக்கலாம்

கடினமான பத்தை எடுக்க OLIVE  OILஅல்லது தேங்காய் எண்ணெய்  தடவி ஊறவைத்து பிறகு ஷாம்பு உபயோகிக்கலாம்


வாரத்திற்கு 2 - 3 தடவை தலைக்கு ஷாம்பு உபயோகிக்கலாம்

தலைக்கு STEROID CREAM உபயோகிப்பதை தவிர்க்கவும் 

Tuesday, March 18, 2014

சிறுநீர் போகும்போது அழும் குழந்தை



பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது  அழுது கொண்டு இருக்கும். இது இயல்பான ஒன்று, இதற்கு கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலோ, வாந்தி, பால் சரியாக குடிக்க வில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுகவும்.

வெயில் நாட்களில் சில குழந்தைகள்
 சிறுநீர் அளவு குறைவாக செல்லும்
போது அழுவார்கள். இதற்க்கு நிறைய தண்ணீர்,
 ஜுஸ், மோர் தர்பூசணி
போன்றவை கொடுத்தால் சரியாகி விடும்.




URINARY  INFECTION இருந்தால் குழந்தைகளுக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக, அடிக்கடி  வரும்.  சிறுநீர் போகும்போது குழந்தை அழுது  கொண்டே இருக்கும்.ஜுரம் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்


சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் கல் இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது குழந்தைகள் அழும்

குழந்தைகளின் பிறப்பு உறுப்பில் ஏதேனும் காயம் அல்லது RASH இருந்தாலும் குழந்தை அழுது கொண்டே சிறுநீர் கழிக்கும்.