இது ஒரு ஒட்டுனியால் வருகிறது.அதன் பெயர் pediculus humanus capitis
இது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது
இது மனித உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது. ஒரு பேன் 5 முறை தினமும் இரத்தம் குடிக்குமாம். ஒவ்வொரு முறையும் 0.00005ml இரத்தத்தை குடிக்குமாம். (இது அந்நியன் ஸ்டைல் : 5 பைசா திருடினா தப்பா? 5 லட்சம் பேர் 5 தடவை 5 பைசா திருடினா தப்பா?) இதனால் இரத்த சோகை ஏற்படலாம்
இதனால் தலையில் அரிப்பு, சிவப்பாகுதல், பாக்டீரியா கிருமி தாக்கம் கழுத்தில் நெறி கட்டுவது போன்ற அறிகுறிகள் காணப்படும் சில நேரங்களில் பேன் முட்டைகள் முடியில் ஒட்டி கொள்ளும் இதனை NITS என்பர்.
சில நேரங்களில் இந்த கிருமி கண் இமையில் ஒட்டிக்கொண்டு எளிதில் எடுக்க முடியாத வண்ணம் இமைகள் ஒட்டிக்கொள்ளும்.
என்ன செய்வது?
பெர்மெத்ரின் (PERMETHRIN ), LINDANE SHAMPOO, GAMMA BENZENE HEXACHLORIDE போன்றவை பயன்படுத்தலாம்
இந்த மருந்துகளை தலை முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் குடும்பத்தில்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதனை பயன்படுத்தவும்
ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவது அவசியம்
குழந்தையின் உடைகளை, பெட்சீட் போன்றவைகளை கொதிநீரில் ஊறவைத்து உலரவைக்கவும்.
No comments:
Post a Comment