Monday, March 7, 2011

வேர்க்குரு என்ன செய்வது?


வேர்க்குரு எல்லாருக்கும் வரலாம், குழந்தைகள்  அதிகம் பாதிக்க படுகிறார்கள் 
உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் வெயில் நாட்களில் அதிக வியர்வையை சுரக்கிறது. இந்த வியர்வை நீண்ட நேரம் உடலில் இருந்தால் வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் அடைப்பு ஏற்படும்.இந்த வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் அடைப்பு ஏற்படுவதால் வேர்க்குரு வருகிறது. இது  
நீர் நிரம்பிய சிறிய கொப்புளம் போன்று இருக்கும்
அரிப்பு ஏற்படும்.
இதனால் குழந்தையின் உடல்நலம் எந்தவகையிலும் பாதிக்க படாது. அரிப்பு மற்றும் எரிச்சலினால் குழந்தைகள் சிறிது சிரமப்படுவார்கள். பொதுவாக ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகி விடும்.





எப்படி தடுக்கலாம்? 

அதிகமாக வியர்வை இல்லாமல் பார்த்து கொள்வது

வியர்வையை உடனுக்குடன் துடைத்து விட வேண்டும்
  
அறையின் வெப்பத்தை குறைவாக வைத்து கொள்வது

AC அல்லது aircooler   பயன்படுத்தலாம்
 
குளிர்ந்த நீர் கொண்டு அடிக்கடி குளிப்பாட்டலாம்
அதிகமாக வியர்வை வரும் இடங்களில் மட்டும் பவுடர் தடவலாம்
வெயிலில் விளையாடுவதை தவிர்க்கலாம்

மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்

இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

வேர்க்குரு வந்த பின்!!!
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வேர்க்குரு  இருக்கும் பகுதியை காற்றோட்டமாக வைப்பதால் அரிப்பு குறைவாக இருக்கும்

 வேர்க்குரு இருக்கும் இடத்தில் சந்தனம் தடவலாம்



1 comment:

  1. hi mahesh

    yur blog is superb. very informative n useful .bye.

    ReplyDelete