Sunday, February 27, 2011

EYE CARE

ஆரோக்கியமான கண் பார்வைக்கு படுத்துக்கொண்டு படிக்கவோ ,தொலைக்காட்சி பார்க்கவோ கூடாது.

தொலைக்காட்சி அல்லது கணினி திரை கண்ணுக்கு  நேராக பார்க்க வேண்டும், பக்க வாட்டிலோ அல்லது கீழே அமர்ந்துகொண்டு பார்க்க கூடாது.
படிக்கும்போது மற்றும் தொலைக்காட்சி பார்க்கும்போது முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு ஒருநிமிடம்  ஒய்வு கொடுக்கவேண்டும்.அதாவது கண்ணை சிறிது நேரம் மூடிக்கொள்ளலாம் அல்லது தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்கலாம்.
போதிய வெளிச்சம் இல்லாத அறையில் படிப்பதை தவிர்க்கவும்


.


 இவ்வாறு செய்தல் கண்ணில் வலி ஏற்படும்

.
தேர்வுக்கு படிக்கும் போது பின்னிரவில் படிப்பதற்கு பதிலாக அதிகாலையில்
படிப்பது நல்லது. பின்னிரவில் கண்கள் மிகவும் சோர்வாக இருக்கும்



.

ஓடும் வாகனங்களில் படிப்பதையோ வீடியோ கேம் விளையாடுவதை தவிர்க்கவும்.


வான ஊர்தியில் படிப்பது தவறில்லை

Thursday, February 24, 2011

WATERING OF EYES IN NEWBORN


பச்சிளம் குழந்தைகளுக்கு கண்ணில் நீர் வருவது சாதாரண பிரச்சனையே

 நமது கண்ணில் கண்ணீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும். ஆனால் அது நமக்கு தெரிவதில்லை, காரணம் கண் இமையில் உள்ள ஒரு துவாரம் மூலமாஅது தொடர்ச்சியாக மூக்கின் வழியாக கண்ணிலிருந்து வெளியே
வருகிறது. இந்த துவாரத்தில் அடைப்பு இருந்தால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.

சாதாரண மசாஜ் மூலம் இதனை எளிதில் சரி செய்ய முடியும். கண்ணின்  உள்புறத்தில்  இருந்து கீழ் நோக்கி  மூக்கின்  வழியாக விரலால் மசாஜ் செய்யவும் . காலை மாலை  10 முறை தினமும் செய்ய வேண்டும்
 விரலில் நகம் இருந்தால் வெட்டி விட்டு  மசாஜ் செய்யவும்.

 இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து  செய்ய  வேண்டும் . தொடர்ந்து  நீர்  வடிந்தால்  மருத்துவரை அணுகவும் . கண்ணில்  வெள்ளையாக பூளை  அல்லது  அழுக்கு  வந்தால்  மருத்துவரிடம்  காண்பித்து  சொட்டு  மருந்து  விடலாம் .

Wednesday, February 23, 2011

தீக்காயங்கள்; என்ன செய்ய வேண்டும்?

தீக்காயங்கள் நான்கு வகைபடும்.



முதல் வகை : தோல் சிவப்பாக மாறியிருக்கும், வலி இலேசாக இருக்கும்.

மிகவும் சாதாரணமானது. எளிதில் ஆறிவிடும்
.
இரண்டாவது வகை: கொஞ்சம் அதிகபடியான தீக்காயம். தோலில் கொப்புளம்

 இருக்கும், வீக்கம், வலி அத்கமாக இருக்கும். உடனடியாக முதலுதவி மற்றும்

மருத்துவ சிகிச்சை அவசியம்
.
மூன்றாவது வகை: மிகவும் அதிகபடியான தீக்காயம். தோல் வெள்ளை

 நிறத்திலோ, கருகி காபி அல்லது கருப்பு நிறத்திலோ இருக்கும். வலி

 குறைவாக இருக்கும்
.
நான்காவது வகை: மிக மிக ஆபத்தானது. தோல்,தசை,எலும்பு எல்லாம்

 தீக்காயத்துக்கு உள்ளாகி இருக்கும். பொதுவாக மின்சாரம் தாக்குவது அல்லது

 இடி தாக்குவதால் ஏற்படும்.


முதலுதவி

எரியும் துணியை உடலில் இருந்து அகற்றவும்

முதல் மற்றும் இரண்டாவது வகை தீக்காயங்களை குளிர்ந்த நீரை கொண்டு
 தீக்காயம் பட்ட இடத்தை குளிர்விக்கவும்.இதை தொடர்ந்து சில நிமிடங்கள்
 செய்யவும். இப்படி செய்வதால் வலி மற்றும் வீக்கம் குறையும்.

காயத்தின் மேல் ஐஸ் வைக்காதீர்கள், இதனால் காயம் ஆறுவது தாமதம்

ஆகலாம்.

மூன்றாவது வகை காயத்தின் மேல் சுத்தமான  ஈர துணியை பரப்பி

 வைக்கலாம்
.
கழுத்து, கையில் உள்ள உலோகத்தினால் ஆன ஆபரணங்களை உடனே

கழற்றி விடவும்.


இறுக்கமான உடைகளை வீக்கம் வரும் முன் கழற்றி விடவும், வீக்கம் வந்த

 பின் கழற்றுவது சிரமமாகிவிடும்

முடிந்தால் காயம் பட்ட பகுதியை மேலே உயர்த்தவும்

காயத்தை குளிர்வித்த பிறகு சுத்தமான துணியினால் மூடி

 வைக்கவும்,இதனால் கிருமிகள் உள்ளே புகாமல் தடுக்கலாம்.

கொப்புளங்களை உடைக்க முயற்சி செய்யாதீர்கள்,அவ்வாறு செய்தால்

 கிருமிகள் எளிதில் உடலில் நுழைந்துவிடும்.

தீக்காயத்தின் மேல் எதையும் தடவ வேண்டாம்(ointment ,butter).

தீக்காயங்கள் இல்லாத பகுதியை கம்பளி கொண்டு மூடி

 வைக்கலாம்.குழந்தையின் உடல் வெது வெதுப்பாக இருக்கும்படி பார்த்து

 கொள்ளுங்கள்.

வலிநிவாரண மருந்துகள் குழந்தையின் எடைக்கு ஏற்ப கொடுக்கலாம் 

வருமுன் காப்பதே  நல்லது. 



FLYING WITH THE BABY!!!

1.விமானத்தில் பறக்கும் குழந்தைகளுக்கு
இருமல் சளி இருந்தால் சளி மருந்தை இரண்டு நாட்களுக்கு முன்பே கொடுத்து சரி செய்து விடுங்கள்.







2.விமானம் மேலே எழும்பும் போதும் தரை இறங்கும் போதும்குழந்தை தூங்குவதை தவிர்க்கவும்

.3 .பெரிய குழந்தைகளுக்கு  chewing gum பயன்படுத்துவது நல்லது.

4 .காதில் பஞ்சு வைப்பதன் மூலம் இரைச்சல் குறைவாக இருக்கும்.

 5 .சிறிய குழந்தைகளுக்கு பாலுட்டினால் அல்லது சூப்பான் கொடுத்தால் காது வலி குறையும்.







.
6 .விமானத்தில் குழந்தை அழுதால் விண்டோ ஷீல்டை உயர்த்தி வேடிக்கை காட்டலாம் அல்லது மறக்காமல் கையோடு கொண்டு செல்லும் அதன் விருப்பமான விளையாட்டு பொருளை கொடுக்கலாம்








7 .குழந்தை தொடர்ந்து அழுதால் ஈரம், தூக்கம் போன்ற காரணமாக இருப்பின்
அவற்றை சரி செய்யலாம்.

8. குழந்தை தொடர்ந்து அலுத்து கொண்டே இருந்தால் குழந்தையின் காதில்  இலேசாக தடவி கொடுக்கலாம்.



   


KIDS AND PETS


வளர்ப்பு பிராணிகள் வாங்குவதற்கு முன் கவனிக்க :
 செல்ல பிராணிகள் அனைவர்க்கும்
மிகவும் நல்ல துணைவனாக இருக்கும்.

 ஆனால் சிறிய குழந்தைகள்  வளர்ப்பு
பிராணியை சரியாக கையாள தெரியாமல் அவைகளை தூண்டிவிடுவதன்
 மூலம் அதனிடம் கடிபட நேரிடும்.
எனவே குழந்தைகளுக்கு ஐந்து வயதாகும்வரை காத்திருப்பது நல்லது .
வளர்ந்த பிராணிகள் நல்லது. குட்டி நாய்,மற்றும் பூனை போன்றவை
 விளையாட்டாக குழந்தைகளை கடிக்க வாய்ப்பு உள்ளது .வளர்ப்பு
பிராணிகளை அன்போடு வளர்க்கவும். 
குழந்தை தன் முகத்தை பிராணிகளின் முகத்தோடு உரச அனுமதிக்காதீர்கள்.

ALL PETS SHOULD BE GIVEN RABIES VACCINATION

   

குழந்தையை வளர்ப்பு பிராணிகளுடன் தனியாக விளையாட விடாதீர்கள்.
வளர்ப்பு பிராணிகளை எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

 நாய் அல்லது பூனையின் வாலை இழுப்பது, அவற்றின் உணவை எடுத்து கொண்டு ஓடுவது போன்ற செயல்களை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள்.
நாய் துரத்தி கொண்டு வந்தால் ஓடினால் அது தொடர்ந்து விரட்டும், கடிக்கவும் செய்யும். எனவே குழந்தைகளை ஓடவேண்டாம் என சொல்லிகொடுக்கவும்.

செல்ல பிராணிகள் தூங்கும்போதும் சாப்பிடும்போடும்  அதை தொந்தரவு செய்ய கூடாது. 

 குழந்தைகளுக்கு பிராணிகளுடன் பழகும்விதம் பற்றி சொல்லிகொடுக்கவும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற வியாதிகளிருந்தால் நாய் பூனை வளர்ப்பதை தவிக்கவும்.
குழந்தையின் படுக்கை அறையில் செல்ல பிராணிகளை அனுமதிக்காதீர்கள். 

Sunday, February 20, 2011

DANGER SIGNS IN NEWBORN BABIES

பச்சிளம் குழந்தையை ஒரு முன் அனுபவம் இல்லாத தாய் வளர்க்கும் போது, குழந்தை எது செய்தாலும் தாய்க்கு ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால், பயம் குறைவாகிவிடும். இருப்பினும் ஒருசில அறிகுறிகள் இருந்தால் உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

1.குழந்தையின் உடல் மஞ்சளாக இருந்தால்

2.சரிவர பால் குடிக்கவில்லை என்றால்

3.மிகவும் சோர்வாக இருந்தால்.(குழந்தை நிறைய நேரம் தூங்கி கொண்டிருப்பது நல்லதுதான்)

4.வாந்தி எடுத்து கொண்டே இருந்தால்

5.அதிகமாக அழுது கொண்டு இருந்தால்

6.காய்ச்சலோ அல்லது உடல் ஜில்லென்று இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகவும்(ஜில்லென்று இருந்தால் என்ன செய்வது என தனி பதிவில் கூறுகிறேன்)

7.மூச்சு திணறல்,மூச்சை நிறுத்தி கொள்ளுதல், கைகால், உதடு நீலநிறமாக மாறினால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும்

8.ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போதும் புரை ஏறினால்

9.தொப்புளை சுற்றி சிகப்பாக இருந்தால்

10.உடலில் ஏதேனும் கொப்புளம் இருந்தால்

11.கண் பொங்கினால்

12. நாக்கு மற்றும் வாயின் உள்புறத்தில் வெள்ளையாக மாவு போன்று படிந்து இருந்தால்(பால் குடிக்கும் குழந்தைக்கு நாக்கில்மாவு போன்று படியலாம் ஆனால் அதை கையினால் எளிதாக நீக்கி விட முடியும், இல்லையெனில் மருத்துவரை அணுகவும்)

13.உடலில் எந்த பகுதியிலிருந்து இரத்தம் வந்தால்(பெண் குழந்தைகளுக்கு பிறந்து சில நாட்களுக்கு பீரியட்ஸ் போன்று பெண் உறுப்பிலிருந்து இரத்தம் வரலாம் இதனால் பயம் கொள்ள தேவை இல்லை)  

Tuesday, February 15, 2011

குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

தூக்கம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். போதிய அளவு ஒய்வு எடுத்த மூளை மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். புதிய விஷயங்களை எளிதில் கற்று கொள்ளலாம்.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
1 -3  மாதம் ----16 -20 மணிநேரம்
4 -6 மாதம் -----13 மணிநேரம்
7 -9 மாதம் -----12 மணிநேரம்
10 -12மாதம் ----12 மணிநேரம்
2 -3 வயது -----12 மணிநேரம்
4 - 7 வயது -----11 மணிநேரம்
8 - 13 வயது -----10 மணிநேரம்
13 வயதுக்கு மேல் ---09 மணிநேரம்
மூன்று வயது வரை குழந்தைகளுடன் பெற்றோர் தூங்குவதை எதிர்பார்பார்கள்.தூங்கும் முன்பாக நல்ல கதைகள் சொல்லலாம்
பொதுவாக ஐந்து வயதுக்கு மேல் குழந்தைகள் பகலில் தூங்குவதை நிறுத்திவிடுவார்கள்.
சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழுவது நல்லது.
குழந்தைகள் போதிய அளவு தூங்காவிட்டால் குழந்தைகளுக்கு மனநிலை தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும், படிப்பதில் கவனம் குறையலாம், நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்.
தூங்கும் நேரம் மற்றும் காலையில் எழும் நேரம் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரி இருப்பது நல்லது.
படுக்கை அறையில் தொலை காட்சி, கம்பியூட்டர் போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
சாப்பிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தூங்க செல்லவும்.
தூங்குவதற்கு முன்பாக காபி , டீ போன்றவற்றை தவிர்க்கவும்.
படுக்கை அரை காற்றோட்டமாகவும், சரியான வெப்ப நிலையிலும் இருத்தல் அவசியம்.
  
   

பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகள் எப்படி இருக்க வேண்டும்?

பச்சிளம் குழந்தைகளுக்கு
ஆடைகள் இறுக்கமாக இருத்தல் கூடாது
பருத்தி ஆடைகள் மிகவும் சிறந்தது.
குழந்தைகளுக்கு எளிதில் அணிவிக்கும் வகையில் முன்புறம் அல்லது பின்புறம் திறக்கும் வகையில் நாடா வைத்த உடைகளை தேர்வு செய்யலாம்.

பெரிய பொத்தான்கள் உடையில் இல்லாதவாறு பார்த்துகொள்ளவும், அவை குழந்தையில் மிருதுவான தோலில் காயத்தையோ அழுத்தத்தையோ ஏற்படுத்தலாம்.
பிளாஸ்டிக் அல்லது சிந்தடிக் நாப்கின் பயன்படுத்துவதை தவிர்க்கவும். துணியால் ஆன நாப்கின் அல்லது பருத்தி துணியை பல மடிப்பாக மடித்து பயன்படுத்தலாம்.இப்படி செய்வதால் அது அதிக அளவு ஈரத்தை உறிஞ்ச கூடியதாக மாறும்.

குளிர்ச்சியான நாட்களில் ஸ்வெட்டர் அணிவிப்பது நல்லது. காலில் socks  கையில் gloves அணிவிப்பது குழந்தைக்கு குளிரடிக்காமல் இருக்க உதவும்.

Tuesday, February 1, 2011

அதிகமாக அழும் குழந்தை

அதிகமாக அழும் குழந்தை
                              பிறந்து சில மாதங்கள் குழந்தைகள் அதிகமாக அழுது கொண்டே இருக்கும். ஏனெனில் இந்த குழந்தைகளுக்கு தெரிந்த ஒரே பாசை அழுவது மட்டுமே. எனவே எந்த தேவை என்றாலும் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். பெற்றோர்களுக்கு இது மிகபெரிய பிரச்சினையாகும். காரணத்தை கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்து விட்டால் குழந்தை நிம்மதியாக தூங்கும். குழந்தை மட்டுமல்லாமல் பெற்றோர்களும் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களும் நிம்மதியாக தூங்க முடியும்
காரணங்கள்
1 .வயிற்று வலி -
பிறந்து மூன்று முதல் ஆறு மாதம் வரை இது இருக்கும்
வயிறு வீக்கமாக இருக்கலாம்
சரியாக ஏப்பம் வராமல் இருந்தால் வலி வரலாம்
பாட்டிலில் பால் கொடுத்தால் அதிகம் வலி வரும்
popi drops அல்லது colicaid drops  கொடுக்கலாம்.
குழந்தையின் வயிறு அமுங்கும்படி குழந்தையை வைக்கவும்.(படத்தில் இருப்பதை போல)













2.மூக்கடைப்பு
சளி பிடித்திருக்கும் நேரத்தில் அழுதால் மூக்கடைப்பாக இருக்கலாம்
nasivion saline  drops மூக்கில் விடுவதன் மூலம் சரி செய்யலாம்

3.காது வலி
சளி பிடித்திருக்கும் நேரத்தில் அழுகும்
காதை தொடும் போது குழந்தை அழுகும்
பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தை அதிகமாக காது வழியால் அழுகும்
காதில் எண்ணெய் விடுதல், buds கொண்டு காதை சுத்தம் செய்தால் காத்து வலி வரலாம்
இது போன்று இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்

4 .எறும்பு அல்லது பூச்சி கடி
உடலில் கடித்த அடையாளம் இருக்கிறதா என பார்க்கவும்

5 .டயாபர் ராஷ் (diaper rash )
ஆசன வாயை சுற்றிலும் சிகப்பாக இருக்கும்
தேங்காய் எண்ணையை அந்த இடத்தில் தடவலாம்
டயாபர் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

6 .குழந்தைக்கு குளிரடித்தால் குழந்தை அழுகும். குழந்தையின் கை மற்றும் கால் பாதம் நீல நிறமாகவும் புறங்கையால் தொட்டு பார்த்தால் குளிர்ச்சியாக இருக்கும்

பசி, சிறுநீர், மலம்  கழிக்கும் முன் மற்றும் கழித்த பின், தூக்கத்திற்கு, கையில் தூக்க சொல்லியும் குழந்தை அழலாம். குழந்தையுடன் பழக பழக அம்மாவால்  குழந்தை ஏன் அழுகிறது என எளிதல் கண்டுபிடித்து விட முடியும். இவற்றில் எதுவும் இல்லையெனில் குழந்தைநல மருத்துவரிடம் உடனே அழைத்து செல்லுங்கள்.