தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கும், மூளை சுறுசுறுப்பு திறனுக்கும் மிகவும் அவசியமானது. நமது மூளையின் நினைவாற்றலை short term memory மற்றும் long term memory என பிரிக்கலாம். short term memory என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் நினைவில் இருக்கும். ஆனால் long term memory என்பது நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும், தூக்கம் நாம் கற்று கொண்ட ஒரு விஷயத்தை short term memory இலிருந்து long term memory ஆக மாற்றுவதற்கு உதவி செய்கிறது
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என எனது பழைய பதிவில் கூறி இருக்கிறேன். தூக்கம் நன்றாக வரும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்தால் சிறிது நேரம் புரண்டு அழுதுவிட்டு தூங்கிவிடும். குழந்தைகள் தூக்கத்திற்கு அழும்போது குழந்தையை தூங்க வைக்க தோளில் படுக்க வைத்து கொண்டு நடப்பது, தொட்டிலை ஆட்டுவது, பால் கொடுப்பது போன்ற வழிமுறைகளை பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் குழந்தை அந்த முறைக்கு பழகி விடுகிறது. குழந்தை தானாக தூங்க கற்று கொள்வதில்லை. பிறகு எப்போது தூக்கம் வந்தாலும் அதே போன்ற முறைகளை எதிர்பார்க்கும், தூங்கிய பிறகு படுக்கையில் படுக்க வைத்தால் இலேசான சத்தம் கேட்டாலும் எழுந்து கொள்ளும், பிறகு பெற்றோர் அதே முறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். எனவே இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.
நான்கு வயது முதல் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள், புதிய விஷயங்களை கற்று கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே எளிதில் தூங்க மறுப்பார்கள்.
சில பெற்றோர்கள் குழந்தைகளை பகலில் தூங்குவதற்கு வற்புறுத்துவது உண்டு. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பகலில் தூக்கம் அவசியம் இல்லை, எனவேதான் ஐந்து வயதிற்கு பிறகு முழுநேர பள்ளி நடத்த படுகிறது.
குழந்தைகளை தூங்கவைக்க பயமுறுத்தும் கதைகள், தூங்கா விட்டால் பூச்சாண்டி வந்து பிடித்து கொண்டு போய்விடுவான் என்று கூறுவதை சில பெற்றோர்கள் கடைபிடிகிறார்கள், அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு பல்வேறு பயத்தை உண்டுபண்ணும். சில மனிதர்கள், நிழல் போன்றவற்றை பார்த்து பயப்படுவார்கள்.
தூங்க வைப்பதற்கு சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு சிறுவயது தூக்கம் பற்றிய பயமுறுத்தும் நினைவுகளை உண்டாக்கும்.
பதின்பருவ குழந்தைகள் தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் அவர்களின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும், அதற்கு தேவையான ஹார்மோன்கள் தூங்கும் நேரத்தில்தான் அதிகமாக சுரக்கும். எனவே சரியான தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் இன்றைய போட்டி மிகுந்த உலகம் குழந்தைகள் அதிகமாக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற pressure அவர்களை சரியாக தூங்க விடுவதில்லை.
இன்றைய காலத்தில் mobile , internet மூலம் தூக்கத்தை குறைத்து கொள்கிறார்கள். எனவே குழந்தையின் பெட்ரூமில் டிவி, கம்ப்யூட்டர் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
தூக்கும் நேரம் என்பது நேர விரயம் என பல பெற்றோர்கள் என்னிடம் கூறுவதை கேட்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொல்வது இதுதான் '' நமது மூளையின் சுறுசுறுப்பு தன்மையை புதுப்பிக்க தூக்கம் மிகவும் அவசியம். எனவே தூங்கும் நேரம் விரயம் அல்ல என்பதுதான்''
தினமும் ஒரே நேரத்தில் தூங்க வைப்பது நல்லது .
தினமும் ஒரே நேரத்தில் தூங்க வைப்பது நல்லது .
தூங்க வைப்பதற்கு முன்;
இனிமேல் உங்கள் குழந்தையின் தூக்கத்தை சந்தோசமாக மாற்றுங்கள்
SWEET DREAMS