தினசரி வாழ்கையில் அதிகமாக நடக்கும் ஒன்று.குழந்தை மண்ணெண்ணெய் குடிப்பது.
ஏன் இது அதிகமாக நடக்கிறது?
1 அநேகமாக மண்ணெண்ணெய் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டிலில் நிரப்பி வைக்கபடுகின்றன.தாகம் எடுக்கும்போது தண்ணீர் என நினைத்து குடித்துவிடுகின்றன.
ஏன் இது அதிகமாக நடக்கிறது?
1 அநேகமாக மண்ணெண்ணெய் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டிலில் நிரப்பி வைக்கபடுகின்றன.தாகம் எடுக்கும்போது தண்ணீர் என நினைத்து குடித்துவிடுகின்றன.
2 மண்ணெண்ணெயின் நீல நிறம் குழந்தைகளை குளிர்பானம் என நினைத்து குடிக்க தூண்டுகிறது.
குழந்தையின் வாயில் மண்ணெண்ணெய் விழுந்தவுடன் அதனது வித்தியாசமான நெடியினால் குழந்தைகள் அதை விழுங்குவதை தவிர்க்க முயற்சி செய்யும்போது புரை ஏற வாய்ப்பு அதிகம். இவ்வாறு புரை ஏறுவதால் நுரையீரலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.
பாதிப்புகள்
நுரையீரல் சேதம் அடைதல் - மூச்சு திணறல் ஏற்படும். சில நேரங்களில் உயிர்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.
சில நேரங்களில் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது.
முதலுதவி
வழக்கமாக எந்தவிதமான விஷமாக இருந்தாலும் உடனே வாந்தி எடுக்க வைப்பது நல்லது. ஆனால் மண்ணெண்ணெய் குடித்திருந்தால் வாந்தி எடுக்க வைக்க கூடாது.இவ்வாறு செய்தால் வாந்தி எடுக்கும்போது அதிகமாக புரை ஏற வாய்ப்பு உள்ளது, எனவே நுரையீரல் பாதிப்பு வாந்தி எடுக்க வைப்பதால் அதிகமாகும்.
குழந்தையின் உடையை உடனே கழற்றி விடவும். குழந்தையின் உடலை சோப்புநீர் கொண்டு கழுவவும்.
குழந்தையை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.
வருமுன் காப்போம்
பெட்ரோலிய திரவங்கள் உதாரணமாக மண்ணெண்ணெய், பெட்ரோல், paint thinner furniture polish போன்றவற்றை கண்டிப்பாக தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டிலில் வைக்காதீர்கள்.
இவற்றை குழந்தைகள் கையில் கிடைக்காதவாறு உயரத்தில் பூட்டி வைக்கவும்.
No comments:
Post a Comment