1.குழந்தைக்கு என்ன என்ன பிரச்சனைகள் என்பதை சுருக்கமாக சொல்ல தயார் படுத்தி கொள்ளுங்கள்.
ஏனெனில் மருத்துவர் கேட்கும் போது அந்த பதட்டத்தில் சில பிரச்சனைக ளை மறந்து விட வாய்ப்பு உள்ளது. தேவை ஏற்பட்டால் ஒரு சிறிய காகிதத்தில் எழுதி வைத்துகொள்ளலாம். தேவை இல்லாத தகவல்களை
தவிர்க்கலாம் என்னுடைய நண்பர் அவரிடம் வந்த குழந்தையின் பெற்றோர் கூறியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
''சார் எங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் நர்ஸ் ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு. அவங்க தனியா தான் இருக்காங்க. நேத்து குழந்தைக்கு ஜுரம் வந்தது. நாங்கள் அவங்களிடம் அவசரத்திற்கு காய்ச்சல் மருந்து வாங்கி கொடுத்தோம்''
இதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்க முடியும். கூறியிருந்தால் அவருக்கு பின்னால் காத்திருக்கும் குழந்தையை சீக்கிரம் மருத்துவர் பரிசோதிக்க முடியும்.
2. குழந்தைக்கு எளிதில் கழற்ற கூடிய வகையில் பருத்தி ஆடை அணிந்து வருவது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஜூரம் இருக்கும் இறுக்கமான மற்றும் மொத்தமான ஆடைகள் அணிவதால் ஜுரம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் குழந்தையின் மேலாடையை கழற்றி விட வேண்டும்
3.குழந்தைக்கு தேவையான உணவு எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏனெனில் மருத்துவ மனையில் எவ்வளவு நேரம் ஆகும் என யாரும் கணிக்க முடியாது.
4.குழந்தைக்கு பிடித்தமான இரண்டு பொம்மைகள் மற்றும் பட புத்தகங்களை எடுத்து கொள்வது நல்லது.
ஏனெனில் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைக்கு எளிதில் BOAR அடிக்கும். (பெற்றோருக்கு BOAR அடிக்குமானால் ஏதேனும் கதை புத்தகங்கள், வார இதழ்களையும் எடுத்து வரலாம் )
5.இரண்டு அல்லது மூன்று DIAPER வைத்து கொள்வது நல்லது
6. இரண்டு towel எடுத்து கொள்வது நல்லது
ஏனெனில் குழந்தையின் மேலாடையை கழற்றிய பின் குழந்தையின் மேல்பகுதிக்கு ஒரு towel , கீழ்பகுதிக்கு ஒரு towel வைத்து மருத்துவரின் அறைக்குள் கொண்டு செல்லவும்
7.குழந்தையின் மருத்துவ குறிப்பேடு மிகவும் அவசியம்.குழந்தைக்கு தற்போது கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து மருந்துகள், தடுப்பு ஊசி அட்டை முதலியவற்றை தவறாமல் எடுத்து கொள்ளவும்.
8. மருத்துவரின் அறைக்குள் செல்லும் முன் தங்கள் கைபேசியை அமைதி நிலைக்கு மாற்றி கொள்வது அவசியம்.மருத்துவரின் அறைக்கு அருகாமையில் நின்றுகொண்டு சத்தமாக கைபேசி பேசுவதை தவிர்க்கவும்.
9. தொலை பேசியில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பின் முன்பதிவு செய்து விட்டு செல்லவும். எதனை மணிக்கு வரவேண்டும் என்பதை கேட்டு கொள்ளவும்.
ஏனெனில் இது காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும். ஆனால் தவறாமல் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சென்றுவிடுங்கள்.
10.மருத்துவரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்து கொள்ளுங்கள். மறக்காமல் இருக்கும்.
11.குழந்தைக்கு அதிகமாக வாந்தி , வயிற்று போக்கு இருந்தால் சிறுநீர் குறைவாக கழித்தால், வலிப்பு வந்தால், மூச்சு திணறல் இருந்தால் சிஸ்டரிடம் உடனடியாக தெரிய படுத்தவும். உங்கள்TOKEN வரும் வரையில் காத்திருக்க வேண்டாம்
12. ஏதேனும் சுய வைத்தியம் செய்து இருந்தால் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லி விடவும்.
ஒருவேளை அது வியாதியை கண்டுபிடிக்க, மேலும் வைத்தியத்தை சீக்கிரம் ஆரம்பிக்க அது உதவியாக இருக்கும்
13. குழந்தைக்கு ஏதேனும் மருந்து அலர்ஜி இருந்தால் மறக்காமல் சொல்லுங்கள்
14. குழந்தையின் இடுப்பில் ஒரு துண்டு வைத்து கொள்ளுங்கள்.
அது என்னமோ தெரியவில்லை, சிறய குழந்தைகளுக்கு எங்கள் மேல் URINE போக அவ்வளவு பிடித்து இருக்கிறது.
15. மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிக்கும்போது பேச வேண்டாம். அப்படி பேசினால் மருத்துவரால் சரியாக பரிசோதிக்க இயலாது
15. மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதிக்கும்போது பேச வேண்டாம். அப்படி பேசினால் மருத்துவரால் சரியாக பரிசோதிக்க இயலாது
No comments:
Post a Comment