Sunday, January 16, 2011
விரல் சப்புதல் தீமையா?
விரல் சப்புதல் ஒன்று முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். இதனால் எந்த தீமையும் ஏற்படாது. எனவே கவலைப்பட தேவையில்லை. தானாகவே இது சரியாகிவிடும். இதை பெற்றோர் அதிகமாக கண்டித்தால் நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஐந்து வயதுக்கு மேல் தொடர்ந்தால் பல் முன்னோக்கி வளர்வது, முக அமைப்பில் மாற்றம், விரலில் காயம் மற்றும் சீழ் வைத்தல், குடலில் கிருமி போன்றவை ஏற்படலாம்
எப்பொழுது கவலை பட வேண்டும்?
ஐந்து வயதுக்கு மேல் குழந்தை விரல் சப்பினால் அதனை சரி செய்ய முயற்சி செய்யலாம்
குழந்தை விரல் சப்பாமல் இருக்கும் நாட்களில் சிறிய பரிசு கொடுப்பதன் மூலம்விரல் சப்பாமல் இருக்க ஊக்க படுத்தலாம்.
கையை சுத்தமாக வைப்பதன் மூலம் கிருமி பாதிப்பு வராமல் தடுக்கலாம்
சுத்தமான முறையில் சூப்பான் பயன்படுத்தலாம்.
குழந்தையின் கவனத்தை வேறு விளையாட்டுகளில் திருப்புவதன் மூலம் மறக்க வைக்கலாம்.
கைகளில் கையுறை அணிவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment