பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு வரும் பீரியட்ஸ்
பெண் குழந்தைகளுக்கு பிறந்த 2 வாரங்களுக்குள் பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம் வரலாம். பயப்பட தேவை இல்லை
தாயின் வயிற்றில் இருக்கும் போது சில ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் ) தொப்புள் கொடி மூலமாக தாயின் உடலில் இருந்து குழந்தையின் உடலுக்கு செல்கிறது. இது சில நாட்களில் குழந்தையின் உடலில் இருந்து வெளியேற்றபடும்போது உதிரபோக்கு ஏற்படுகிறது. சில நாட்களில் இந்த உதிரபோக்கு தானாகவே சரியாகி விடும்.